எனக்கு கிளாமர் போச்சு.. நேஹா தூபியா

மாடலாக இருந்து நடிகையானவர் நேஹா. பாலிவுட்டின் செக்ஸ் சைரன்களில் நேஹாவும் முக்கியமானவர். பாலிவுட்டில் செக்ஸும், ஷாருக்கானும் மட்டும்தான் விலை போகக் கூடிய விஷயங்கள் என்று பகிரங்கமாகப் பேசி பரபரப்பை ஏற்படுத்தியவர்.
செக்ஸியாக மட்டுமே நடிப்பது என்பதை வழக்கமாக கொண்டுள்ள நேஹா இப்போது கிளாமர் கேரக்டர்களிலிருந்து வேறு பாதைக்குத் திரும்பத் தொடங்கியிருக்கிறார். இனிமேல் சீரியஸ் படங்களில் நடிக்கப் போகிறாராம் தூபியா.
ஏன் என்று கேட்டால், கிளாமர் நடிகை என்ற பெயர் எனக்கு இருந்தது. ஆனால் சில சீரியஸ் படங்களில் நடிக்க ஆரம்பித்த பின்னர் தொடர்ந்து அதே பெயர் எனக்கு இருக்கும் என நான் நினைக்கக் கூடாது. எனவேதான் இனிமேல் நான் சீரியஸ் படங்களில் அதிக கவனம் செலுத்தப் போகிறேன்.
ஒரு நடிகையாக, கிளாமரும் செய்ய வேண்டும், சீரியஸ் ரோல்களிலும் ஜொலிக்க வேண்டும் என்கிறார் நேஹா.
சமீபத்தில் வெளியான தஸ்விதனியா, மித்யா ஆகிய இரு படங்களில் சீரியஸான கேரக்டர்களில் நடித்திருந்தார் நேஹா.
அவரது முதல் படமான கயாமத்தில், பிகினி உடையி்ல தோன்றி பிரளயத்தை ஏற்படுத்தியவர் நேஹா. தொடர்ந்து ஜூலி, ஷீஸா ஆகிய படங்களிலும் கிளாமரில் பின்னி எடுத்தார்.
அவர் முதன் முதலில் கிளாமர் இல்லாமல் நடித்த படம் டெல்லி ஹைட்ஸ். அதில் வேலை பார்க்கும் பெண் கேரக்டரில் நடித்திருந்தார். தொடர்ந்து தஸ் கஹானியான், மித்யா, சுப் சுப் கே ஆகிய படங்களில் நேஹாவின் நடிப்பு பேசப்பட்டது.
அடுத்து மஹாரதி என்ற படத்தில் நடித்துள்ளார் நேஹா. இப்படத்தில் ஆர்ட் பிலிம் ராஜாக்களான ஓம் பூரி, பரேஷ் ராவல், நஸிருதீன் ஷா ஆகியோரும் உள்ளனர். இம்மாத இறுதியில் படம் திரைக்கு வருகிறது.
இப்படத்தில் வளரும் நடிகையாக நடித்துள்ளார் நேஹா. படத்தில் நடிக்க நல்ல வாய்ப்பாம். கிளாமரும் இருக்கிறதாம்.
தஸ்விதனியா தோல்விப் படமாகி விட்டதே என்று கேட்டால், அதைப் பற்றிக் கவலை இல்லை. நான் போகும் பாதை பிடித்திருக்கிறது. தொடர்ந்து இப்படியே நடிக்க ஆர்வமாக உள்ளேன் என்கிறார் நேஹா.


Click it and Unblock the Notifications