ஸ்னிக்தாவுக்கு மட்டும் முக்கியத்துவமா?

இதுகுறித்து விசாரிக்கையில், ஸ்னிக்தாவுக்கு இயக்குநர் தரும் அதீத முக்கியத்துவம் பற்றியும் மற்ற நடிகைகளுக்கு போதிய முக்கியத்துவம் இல்லாதது குறித்தும் வருத்தப்பட்டுப் பேசுவதாகத் தகவல் கிடைத்தது.
கத்தாழக் கண்ணழகி ஸ்னிக்தா, மற்ற 4 நடிகைககளான சமிக்ஷா, காம்னா, மீனாட்சி, மும்தாஜ் ஆகியோரை உசுப்பேற்றும் விதத்தில், இயக்குநருக்கு என் நடிப்பு பிடித்துவிட்டதால், என்னுடைய ரோலை நன்றாக டெவலப் செய்துள்ளார், என்பது போல பேட்டிகள் கொடுத்து வந்தார்.
இந்நிலையில் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை...தேவையில்லாமல் விஷயத்தைப் பெரிதுபடுத்துகிறார்கள் என பேட்டியளித்துள்ளார் இயக்குநர் ஷக்தி சிதம்பரம்.
அவர் கூறியிருப்பதாவது:
குறிப்பிட்ட ஒரு நடிகைக்கு மட்டும் நான் முக்கியத்துவம் தருவதாகக் கூறுவது தவறானது. யாரோ இப்படிக் கொளுத்திப் போட்டிருக்கிறார்கள். ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள 5 நடிகைகளுக்குமே சம்மான முக்கியத்துவம் தந்து இந்தப் படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறேன். பாடல் காட்சிகளுக்காக வெளிநாட்டுக்குப் போகவிருக்கிறோம்... என்றார்.
இந்த பாடல் காட்சியில் 5 நாயகிகளுக்குமே சம வாய்ப்பா இல்லை ஸ்னிக்தா மட்டும்தானா டைரக்டர் சார்?!


Click it and Unblock the Notifications











