'மீடியாவுக்கு' நன்றி சொல்லும் பேராண்மை

Peranamai
பேராண்மை படத்தின் வெற்றிக்கு மீடியாவும் ஒரு காரணம் என்பதை தெரிவிக்கும் வகையில், ஊடகங்களுக்கு நன்றி சொல்லி தினசரி பத்திரிகை விளம்பரம் கொடுக்க ஆரம்பித்துள்ளனர் பேராண்மை படக் குழுவினர்.

சமீபத்தில் வந்து போன தீபாவளிக்கு மொத்தமே மூன்று படங்கள்தான் திரைக்கு வந்தன. ஒரு படம் பேராண்மை, இன்னொன்று ஆதவன், 3வது படம் நமீதாவின் ஜெகன்மோகினி.

இதில் பேராண்மை மட்டுமே ரசிகர்களின் மனதில் பெரிய இடத்தைப் பெற்றுள்ளதாக திரையுலகில் பேசிக் கொள்கிறார்கள். நல்ல கதையம்சத்துடன் வந்த பேராண்மைக்கு ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாது விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல பேச்சு உள்ளது.

வித்தியாசமான கதையம்சம், தெளிவான திரைக்கதை, சிறப்பான நடிப்பு என அனைத்து அம்சங்களிலும் பேராண்மை திருப்திகரமாக இருப்பதாக பேச்சு உள்ளது.

ஊடகங்களிலும் கூட பேராண்மை குறித்து சிறப்பான முறையில் விமர்சனங்கள் வந்தது. இதனால் குஷியாகியுள்ள பேராண்மைக் குழுவினர், தினசரி பத்திரிகை விளம்பரங்கள் மூலம் ஊடகங்களுக்கு நன்றி சொல்லி வருகின்றனர்.

ஒவ்வொரு நாளும் ஒரு பத்திரிக்கையில் வந்த பாராட்டுக்களை எடுத்துக் கூறி மாபெரும் வெற்றியை முன்னெடுத்துச் சென்ற ஊடகங்களுக்கு நன்றி என்று கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறது பேராண்மைக் குழு.

ஜெகன்மோகினி படத்துக்கான விளம்பரத்தை இப்போது அதிக அளவில் காண முடியவில்லை. ஆதவன் படத்துக்கான விளம்பரமோ, எல்லாமே இருக்கு, அதுதான் ஆதவன் மிடுக்கு என்று வழக்கமான எதுகை மோனை ஸ்டைலில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பேராண்மைக் குழுவினரின் ஊடகங்களுக்குப் பாராட்டு என்ற வித்தியாசமான விளம்பரம் திரையுலகினரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X