10 படங்கள் - ஒரே நாளில் பூஜை!

By Staff

Pyramid Saimira launches 10 films simultaneously
பிரமீட் சாய்மீரா நிறுவனம் ஒரே நேரத்தில் பத்து படங்களைத் தயாரிக்கிறது.

ஆரம்பத்தில் தியேட்டர்களை ஒப்பந்தத்திற்கு எடுத்து வந்த பிரமீட் சாய்மீரா நிறுவனம் பின்னர் விநியோகத்திலும் ஈடுபட்டது. இப்போது தயாரிப்பிலும் தீவிரமாக இறங்கியுள்ளது.

இந்த நிலையில் இன்று ஒரே நாளில் 10 படங்களுக்கு பூஜை போட்டு சாதனை படைக்கிறது. சென்னை, லேடி ஆண்டாள் பள்ளி வளாகத்தில் இதற்கான பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பிரமிட் சாய்மீரா இயக்குனர் நாராயணன், திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராமநாராயணன், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் கே.ஆர்.ஜி., பிரமிட் சாய்மீரா நிர்வாக இயக்குனர் சாமிநாதன், தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் சரத்குமார் உள்ளிட்டோர் இதில் பங்கேற்கின்றனர்.

கோவைத் தம்பியின் மதர்லேண்ட் பிக்சர்ஸ் (இயக்கம் - கிருஷ்ணா), தெய்வானை மூவி மேக்கர்ஸ் (இயக்கம் - ஜெயப்பிரகாஷ்), சங்கிலி முருகனின் மீனாட்சி ஆர்ட்ஸ் (இயக்கம் - எஸ்.பி.ராஜகுமார், படப் பெயர் அழகர் மலை), ராமநாதனின் ராஜ் பிலிம்ஸ் (இயக்கம் - விஷ்ணு சங்கரன்), கரகாட்டக்காரன் புகழ் கருமாரி கந்தசாமியின் விஜயா மூவிஸ் (இயக்கம் தயா செந்தில்), அழகன் தமிழ்மணியின் ஸ்ரீநாச்சியார் அம்மன் பிலிம்ஸ் (இயக்குநர்-பின்னர் அறிவிக்கப்படும்), கே.பாலுவின் மலர் பிலிம்ஸ் (இயக்கம் - ரத்னகுமார்), கே.ராஜனின் கே.ஆர்.பி. புரடக்ஷன்ஸ் (இயக்கம் -மனோஜ்குமார்), ராதாரவியின் பிஆர்ஆர் ஆர்டஸ் (இயக்குநர்- பின்னர் அறிவிக்கப்படும்), சின்மயா கம்பைன்ஸ் (இயக்கம் - பிரவீன் காந்த்) ஆகியோர் இப்படங்களைத் பிரமீட் சாய்மீராவுக்காக தயாரிக்கவுள்ளனர்.

தமிழ்த் திரையுலகில் ஒரு நிறுவனம் ஒரே நேரத்தில் பத்து படங்கள் தயாரிப்பதும், பூஜை போடுவதும் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X