பிரபுதேவா மகனுக்கு ரஜினி, கமல் அஞ்சலி

பிரபுதேவா-லதா தம்பதிக்கு விஷால், ரிஷி ராகவேந்திர தேவா, ஆதி தேவா என 3 மகன்கள்.
மூத்த மகன் விஷால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தான். அவனுக்கு சில வருடங்களாக சிகிச்சை அளித்து வந்தனர்.
வெளிநாட்டுக்கு செல்ல வேண்டும் என்று விஷால் சமீபத்தில் ஆசைப்பட்டதையடுத்து சமீபத்தில்தான் சுவிட்சர்லாந்தில் நடந்த வில்லு படப்பிடிப்புக்கு அழைத்து சென்றார் பிரபுதேவா.
மீண்டும் சென்னை திரும்பிய விஷால், தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தபோதும் அவனது உடல்நிலை நாளுக்குநாள் மோசம் அடைந்தது. மருத்துவர்களும் ஏற்கெனவே விஷாலின் மரணம் குறித்து கெடு விதித்து விட்டிருந்தனர்.
நேற்று அதிகாலை 3.30 மணிக்கு மரணம் அடைந்தான். ரஜினி, கமல், அஜீத், விஜய், பிரகாஷ்ராஜ், குஷ்பு, நயன்தாரா உட்பட திரையுலகினர் திரளாக வந்து விஷாலின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். மாலை 3 மணியளவில் இறுதிச் சடங்கு நடந்தது.


Click it and Unblock the Notifications











