twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரஜினியும் கமலும் பாடவிருக்கும் 'கருணாநிதி துதி'!

    By Staff
    |

    Harris Jayaraj
    முதல்வர் கருணாநிதி பற்றி வாலி எழுதிய துதிப் பாடல் ஒன்றை நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாஸன் உள்ளிட்ட கலைஞர்களும், ஏராளமான பாடகர்களும் இணைந்து பாடவிருக்கிறார்கள்.

    கிட்டத்தட்ட உன்மத்தம் பிடித்த நிலைக்குப் போயிருக்கிறது தமிழ் சினிமாவும் அரசியல் களமும். துதிபாடுவதில் ஒருவருக்கொருவர் சளைக்காமல் காட்சிகளை அரங்கேற்றி வருகின்றனர்.

    சினிமாக்காரர்கள் பாராட்டு விழா எடுப்பதும், அவர்களுக்கு கருணாநிதி சலுகைகளை வழங்குவதும் தங்குதடையில்லாமல் தொடர்கிறது. தமிழகத்தின் சூப்பர் சிட்டிசன்களாக மாறியுள்ளனர் சினிமாக்கார்கள். மக்களோ இரண்டாம் தர பிரஜைகளாக தள்ளப்பட்டுள்ளனர்.

    இந்த 'சிறந்த நிலை'யை உருவாக்கிய முதல்வர் கருணாநிதிக்கு தமிழ் சினிமா மீண்டும் ஒரு விழா எடுக்கிறது நாளை சனிக்கிழமை (பிப்ரவரி 6).

    இந்த விழாவில் கருணாநிதிக்கென ஒரு துதிப்பாடல் இயற்றப்பட்டுள்ளது. இந்தப் பாடலை எழுதியிருப்பவர் துதி பாடுவதில் தன்னிகரற்ற கவிஞராகத் திகழும் வாலி. இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

    உண்ணி மேனன், திப்பு, ஹரிச்சந்திரன், தேவன், விஜயகோபால், சின்மயி, சாருலதா, மதுமிதா, திவ்யா, நேஹா, நஷிதா ஆகியோர் இந்தப் பாடலைப் பாடுகின்றனர்.

    இந்தப் பாடல் பாடப்படும்போது, நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரத் குமார் உள்ளிட்டோரும் சேர்ந்து பாடுவார்கள் என்று விழாக் குழுவினர் அறிவித்துள்ளனர். அந்தப் பாடல்:

    வா! வா! தலைவா!
    வணக்கம்! வணக்கம்! - நீ
    வந்தால் எங்கள்
    வாழ்வு மணக்கும்!

    வெள்ளை நிறத்து வேட்டியிலே
    கறுப்பு சிவப்புக் கரையிருக்க...
    நீல நிறத்துக் கண்ணாடி
    கண்களின் மேலே

    கொலுவிருக்க...
    மஞ்சள் நிறத்து
    மேல்துண் டணிந்த
    பச்சைச் தமிழே! வருக! எங்கள்

    இச்சைத் தமிழே! வருக!

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X