பட்டையைக் கிளப்பும் ரஜினியின் பாட்ஷா!

அது தமிழ் சினிமாவின் எவர்கிரீன் படம் எனப் புகழப்படும் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த பாட்ஷா.
சுமார் ஒரு வருடம் ஒடி பல சாதனைகளை முறியடித்த படம் 'பாட்ஷா'. பாட்ஷா படத்தில் இடம்பெற்ற "நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி" என்கிற வசனம் இன்றும் சிறு குழந்தைகளிடம்கூட பிரபலமாக இருக்கிறது.
சென்னையில் அண்ணா, ஸ்ரீநிவாசா, நியூபிராட்வே, மகாலெட்சுமி ஆகிய நான்கு தியேட்டர்களில் இப்படத்தை ரீ-ரிலீஸ் செய்திருக்கிறார்கள்.
விஷயமறிந்த ரஜினி ரசிகர்கள் பெருமளவில் படம் பார்க்க திரண்டுவிட்டனர். "தீபாவளிப் புதுப்பட அரங்குகள் காலியாக இருக்கையில், தலைவரின் பாட்ஷா வெலியான அரங்குகள் திருவிழாக் கோலத்தில் இருந்தது, ரஜினியின் மாஸ் என்ன என்பதை பறைசாற்றுகிறது," என ரஜினி ரசிகர்கள் தெரிவித்தனர்.
படம் வெளியான அண்ணா தியேட்டரில் பல ரசிகர்கள் ரஜினி பேனருக்கு முன்னாள் நின்று படங்கள் எடுத்துக் கொண்டனர். தலைவரின் படங்களுக்கு முதல் நாள் முதல் காட்சியின் போது எப்படி தூள் கிளப்புவார்களோ, அதற்கு நிகராக பாட்ஷா மறுவெளியீட்டின் முதல் காட்சியின்போதும் செய்து அசத்தினர் ரசிகர்கள்.
இதற்கிடையே சென்னை சீனிவாசா திரையரங்கில் பாட்ஷாவின் சிறப்புக் காட்சிக்கு சைதை பகுதி ரஜினி ரசிகர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
நூற்றுக்கணக்கான ரசிகர்கள் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சிக்கு சைதை ரவி பொறுப்பேற்றுள்ளார். மாலை 6 மணிக்கு மேள தாளம் முழங்க, அதிர்வேட்டு முழக்கத்தோடு இந்த சிறப்புக் காட்சி தொடங்குகிறது.


Click it and Unblock the Notifications











