ஆசான் ராஜ்கிரண்!

இந்தப் படத்தில் ராஜ்கிரண் சிலம்பக் கலையை கற்றுக் கொடுக்கும் ஆசானாக நடிக்கிறார். இதனால் அவர் சிலம்பக் கலையை, களரி செல்வராஜ் என்பவரிடம் முறைப்படி கற்றுக் கொண்டிருக்கிறார்.
ஐ.டி.ஏ பிலிம்ஸ் எஸ்.என் ராஜா தயாரிக்கும் இப்படத்தில் இன்னொரு ஹீரோவாக, மிருகம் படத்தில் நடித்த ஆதி நடிக்கிறார். கருப்பசாமி குத்தகைதாரர் படத்தில் நடித்த மீனாட்சி இந்தப் படத்தில் நாயகியாக நடிக்கிறார்.
தமிழர்களின் கடவுளாகப் போற்றப்படும் முருகனின் கையில் இருக்கும் வேலின் இன்னொரு வடிவம்தான் சிலம்பம். இந்த ஆரோக்கியமான கலையையும், தமிழர் சரித்திரத்தையும் பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதுதான் இப்படத்தின் நோக்கம் என்கிறார் ராஜ்கிரண்.
தமிழர்களுக்கேற்ற படம்.
Comments


Click it and Unblock the Notifications