சிம்பு படத்தில் ஷ்ரியா

By Staff

Shreya
வடிவேலுவுடன் ஒரு பாட்டுக்கு ஆடப் போக முன்னணி ஹீரோக்களால் கைவிடப்பட்ட ஷ்ரியாவுக்கு சிம்புவுடன் ஜோடி சேரும் வாய்ப்பு வந்துள்ளது.

ரஜினிகாந்த்துடன் சிவாஜி படத்தில் ஜோடி சேர்ந்ததால் ஷ்ரியாவுக்கு கோலிவுட்டில் புதிய அந்தஸ்து கிடைத்தது. இதையடுத்து விஜய்யுடன் ஜோடி சேர்ந்தார். அதைத் தொடர்ந்து அஜீத்துடனும் ஒரு படம் கிடைத்தது.

இந்த நேரத்தில் வடிவேலுவின் இந்திரலோகத்தில் நா. அழகப்பன் படத்தில் ஒத்தப் பாட்டுக்கு ஆடப் போய் சிக்கலில் மாட்டினார் ஷ்ரியா.

வடிவேலுவுடன் ஆடியதால் அப்செட் ஆன அஜீத், தனது படத்திலிருந்து ஷ்ரியாவைத் தூக்கச் சொல்லி விட்டார். பல விதங்களிலும் அஜீத்துடன் சமரசத்திற்கு ஷ்ரியா முயன்றும் அது கை கூடவில்லை.

இதையடுத்து மேலும் சில பட வாய்ப்புகளும் ஷ்ரியாவின் கையை விட்டு நழுவின. இதனால் விக்ரமுடன் நடித்து வரும் கந்தசாமியைத் தவிர வேறு புதிய படம் இல்லாத நிலைக்குத் தள்ளப்பட்டார் ஷ்ரியா.

இந்த நிலையில் அவரை அணுகினார் இயக்குநர் ஷக்தி சிதம்பரம். சண்டை படத்தைத் தொடர்ந்து அவர் சிம்புவை வைத்து ஒரு அதிரடிப் படத்தை இயக்கவுள்ளார். இதில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்று ஷ்ரியாவிடம் அவர் கேட்க, முதலில் யோசித்துள்ளார் ஷ்ரியா. இருப்பினும்த தற்போதையை தனது மார்க்கெட் வறட்சியை மனதில் கொண்டு, சிம்புவுடன் ஜோடி சேர முடிவு செய்து ஓ.கே. சொல்லி விட்டாராம் ஷ்ரியா.

இதுதவிர தனது சம்பளத்தையும் அதிரடியாக குறைத்துள்ளாராம் ஷ்ரியா. அப்படியாவது வாய்ப்பு மழை மறுபடியும் பெய்யுமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளாராம் ஷ்ரியா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X