மீண்டும் 'புதிய பாதை'!

பார்த்திபன் எழுதி, இயக்கி, நாயகனாக நடித்த படம் புதிய பாதை. இதில் அவருக்கு ஜோடியாக நடித்த சீதாவை நிஜத்திலும் காதலித்து மணந்து கொண்டார். தற்போது இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
புதிய பாதை தேசிய விருது பெற்ற படமாகும். இப்படத்தை தற்போது ரீமேக் செய்யத் திட்டமிட்டுள்ளாராம் பார்த்திபன். தற்போது பார்த்திபன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வித்தகன் என்ற படத்தை இயக்கி, நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடி போட்டிருப்பவர் பூர்ணா.
இந்தப் படத்தை விட்டு புதிய பாதை ரீமேக்குக்கு வருவார் பார்த்திபன் என்று தெரிகிறது. இருப்பினும் ரீமேக்கில் அவர் நாயகனாக நடிக்க மாட்டார் என்று தெரிகிறது. வேறு ஹீரோவை போட்டு எடுப்பார் என்றும் கூறப்படுகிறது. பார்த்திபன் இயக்கத்தோடு நின்று கொள்வாராம்.
Comments
தமிழ் சினிமா பார்த்திபன் புதிய பாதை பூர்ணா வித்தகன் parthiban poorna puthiya pathai tamil cinema vithagan


Click it and Unblock the Notifications