கோமாவில் நடிகர் சுதாகர்

தெலுங்குத் திரையுலகில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராகஇருப்பவர் சுதாகர். ஆனால் இவர் ஒரு காலத்தில் தமிழிலும், தெலுங்கிலும் முன்னணி ஹீரோவாக இருந்தவர்.
கிழக்கே போகும் ரயில் படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் சுதாகர். தொடர்ந்து சுவர் இல்லாத சித்திரங்கள், எங்கள் வீட்டு ராஜாத்தி உள்ளிட்ட ஏராளமான தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார்.
நாளைடவில் தெலுங்கில் காமெடி நடிகராகி விட்டார் சுதாகர். 54 வயதாகும் சுதாகருக்கு சமீபத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.
ஹைதராபாத்தில் உள்ள கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது சிறுநீரகமும், மூளையும் சரிவர செயல்படவில்லை. இதையடுத்து அவர் தற்போது கோமாவுக்குப் போய் விட்டார். அடுத்த 48 மணி நேரம் வரை எதுவும் சொல்ல முடியாது என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
70களில் சென்னையில் நடிப்பு வாய்ப்பு தேடி ஸ்டுடியோ ஸ்டுடியோவாக ஏறி இறங்கிய காலகட்டத்தில், சுதாகர் தங்கியிருந்த அறையில் அவருடன் இருந்து வாய்ப்பு தேடி வந்தவர் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி. இருவரும் ஒன்றாக சேர்ந்து சினிமா வாய்ப்பு தேடி வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











