'ஜாக்கி' வேதிகா!

By Staff

Vedika with Arun Vijay
அருண் விஜய்யுடன் இணைந்து வரும் மலை மலை படத்தில் ரேடியோ ஜாக்கி வேடத்தில் கலக்கியுள்ளாராம் வேதிகா.

காளை, தொடர்ந்து முனி ஆகிய படங்களில் நடித்தவர் வேதிகா. இதுதவிர தெலுங்கில் விஜயதசமி என்ற படத்தில் நடித்துள்ளார் வேதிகா. விசேஷம் என்னவென்றால் மூன்றுமே தோல்விப் படங்கள்.

இதனால் ராசியில்லாத ராணிகள் வரிசையில் வேதிகாவையும் சேர்த்து விட்டனர்.

இருப்பினும் அவரது திறமை மீது மதிப்பு வைத்து தனது மலை மலை படத்தில் நடிக்க வைத்தார் இயக்குநர் வெங்கடேஷ்.

கமர்ஷியல் கிங் ஆன வெங்கடேஷ் இயக்கி வரும் மலை மலை படத்தில் நாயகனாக நடிப்பவர் அருண் விஜய். அவரது மாமனார்தான் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

படத்தில் வேதிகாவுக்கு அட்டகாசமான கேரக்டர். படத்தில் அவரது கேரக்டரை ரகசியமாக வைத்துள்ளனராம். ஆனால் ரேடியோ ஜாக்கியாக வருகிறாராம் வேதிகா.

தொடர்ந்து தோல்விப் படங்களைக் கொடுத்தவள் என்ற பெயர் எனக்கு இருந்தாலும், இந்தப் படம் அதை மாற்றும் என்கிறார் நம்பிக்கையுடன் வேதிகா.

படத்தில் அருண் விஜய், பிரகாஷ் ராஜ் கேரக்டர்கள் செமத்தயாக இருப்பதாகவும், இருப்பினும் அதையும் தாண்டி தனது கேரக்டரும் ரசிகர்கள் மனதில் நிற்கும் என்றும் சந்தோஷத்துடன் கூறுகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X