நயன்தாரா படங்களைக் கொளுத்தி பெண்கள் போராட்டம்!

By Chakra

Nayanthara
சென்னை: "கலாச்சாரத்தை சீரழிக்கும், பெண்களின் அவமானச் சின்னமாகத் திகழும் நயன்தாரா ஒழிக", என்று கோஷமிட்டபடி அவரது உருவப்படத்தை கொளுத்தினர் பெண்கள் அமைப்பினர்.

நயன்தாராவுடன் கள்ளக்காதலில் தீவிரமாக உள்ள பிரபுதேவா, அவரையே திருமணம் செய்யப் போவதாகவும் அறிவித்துள்ளார். இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. பிரபுதேவா மனைவி ரம்லத் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

துடைப்பம், செருப்பால் அடித்து கொளுத்தினர்...

நயன்தாராவுக்கு எதிராக பெண்கள் அமைப்பினரும் போராட்டத்தில் குதித்துள்ளனர். ஜான்சி ராணி பெண்கள் பாதுகாப்பு சங்கம், மனித உரிமைகள் கழகம் சர்வதேச அமைப்பு போன்றவற்றை சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் இன்று காலை திருமங்கலம் சிக்னல் அருகில் கூடினார்கள். கையில் நயன்தாரா உருவப்படங்கள் வைத்திருந்தனர் அவர்கள், திடீரென்று நயன்தாராவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியபடி உருவப்படத்தை துடைப்பத்தாலும் செருப்பாலும் அடித்தனர்.

'நயன்தாராவே, கலாச்சார சீரழிவுக்கு வழி வகுக்காதே', 'பெண்களின் அவமானச் சின்னம் நயன்தாரா ஒழிக' என்றெல்லாம் கோஷங்கள் எழுப்பினர். பின்னர் நயன்தாரா படங்களை தீ வைத்து எரித்தனர்.

ஜான்சி ராணி மகளிர் பாதுகாப்பு சங்கத்தலைவி கல்பனா தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

இந்தப் போராட்டம் குறித்து கல்பனா கூறுகையில், "நடிகை நயன்தாரா - பிரபுதேவாவுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக அவரது மனைவி ரம்லத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். நயன்தாரா ரம்லத் வாழ்க்கையில் வீணாக குறுக்கீட்டு அவரையும், அவரது குழந்தைகளையும் அனாதைகளாக்குவதை ஜான்சி ராணி பெண்கள் பாதுகாப்பு சங்கம் வேடிக்கை பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது.

தமிழகம் முழுவதும் உள்ள எங்க பெண்கள் சங்க உறுப் பினர்களை திரட்டி போராட்டத்தில் குதிப்போம். தமிழ் கலாச்சாரத்திற்கு எதிராக செயல்பட்டு வரும் நயன்தாரா படங்களை பெண்கள் ஒட்டு மொத்தமாக புறக்கணிப்போம். அவர் தமிழகத்தில் எந்த விழாவில் பங்கேற்றாலும் அங்கு பெண்களை திரட்டி கறுப்பு கொடி ஏந்தி போராடுவோம்.

அப்பாவி பெண்ணான ரம்லத்திற்கு நயன்தாரா தொடர்ந்து இடையூறு செய்து வருவதை அறிந்து வேதனை அடைந்துள்ளோம். அவர் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு யாரும் துணையாக இல்லை என்றும், இதனால் எளிதாக பிரபுதேவாவை தன் வசப்படுத்தி ரகசியமாக திருமணம் செய்து கொள்ளலாம் என்று நயன்தாரா தப்பு கணக்கு போடுகிறார். அவரது கனவு பலிக்காது.

அவர் ரம்லத்தை தொடர்ந்து மனரீதியாக துன்புறுத்தினால் நாங்கள் பொறுக்க மாட்டோம்.

தமிழ்நாட்டில் சினிமா மூலம் தவறான கவர்ச்சி கலாச்சாரத்தை பரப்பி வரும் நயன்தாரா தற்போது அதை நிஜ வாழ்விலும் கடைப் பிடிக்கிறார். இவரது தவறான வழி காட்டுதலில் இளைய சமுதாயம் சீரழியும் நிலை ஏற்பட்டு விடும்.

எனவே அவரை கண்டித்து இன்று அண்ணாநகர், திருமங்கலம், முகப்பேர், பகுதியைச் சேர்ந்த பெண்கள் அமைப்பினர், மனித உரிமை கழகம் (சர்வதேச அமைப்பு) மகளிர் அணியினர் ஒன்றாக இணைந்து நயன்தாராவுக்கு எதிராக போராட்டம் நடத்தி உள்ளோம்.

நயன்தாரா படங்களை தீ வைத்து கொளுத்தியும், செருப்பால் அடித்தும் எங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்ளோம். இந்தப் போராட்டம் தொடரும்", என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X