ஆன்லைன் மியூசிக் ஷாப் - தொடங்கினார் ஏஆர்.ரஹ்மான்

ஆஸ்கர் வென்ற ஸ்லம்டாக் மில்லியனர், எலிசபெத் உட்பட ஏராளமான தனது சிறந்த இசைத் தொகுப்புகளை ஆன்-லைன் மூலமாகவே உலககெங்கும் உள்ள தனது ரசிகர்களுக்கு நேரடியாகவே ரஹ்மான் விற்க துவங்கி விட்டார்.
அவரின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் உள்ள, 'தி ஏ ஆர் ரஹ்மான் ஸ்டோர்' மூலம் தற்போது ஏழு கலெக்ஷன் மட்டுமே விற்பனை உள்ளன.
விரைவில் இதன் மூலமாக எக்ஸ்க்ளூசிவ் இசை தொகுப்புகள், விற்பனைக்கு முந்தைய டிக்கெட்டுகள், டிவிடிக்கள் ஏராளமாக வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
தற்போது ரஹ்மானின் மியூசிக் ஷாப்பில், ஸ்லம்டாக் மில்லியனர், எலிசபெத், தி கோல்டன் ஏஜ், பாம்பே டிரீம்ஸ், ஒரிஜினல் லண்டன் புரோடக்ஷன், லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் மற்றும் வந்தே மாதரம், பிட்வின் ஹெவன் அண்ட் எர்த், பெஸ்ட் ஆஃப் ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற ஆல்பங்கள் விற்பனைக்கு உள்ளன.
கனடா டாலர், யூரோ, பிரிட்டன் பவுண்ட், அமெரிக்க டாலர் மூலமாக மட்டுமே இந்தப் படைப்புகளை வாங்க முடியும்.
விலை 12.49 முதல் 22.99 அமெரிக்க டாலர் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











