twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பால், பீர், பஸ் மீது கல் வீச்சு...அஜீத் ரசிகர்கள் கலாட்டா!

    By Staff
    |

    ரசிகர்கள் இனிமேலாவது பக்குவமடைய வேண்டும் என்று பல அதிரடி முடிவுகளை அறிவித்து வந்தார் அஜீத். அல்டிமேட் ஸ்டார் பட்டம் வேண்டாம், தரமான படங்களைத் தர முயற்சிக்கிறேன், ரசிகர் மன்றம் என்ற பெயரில் தேவையற்ற அலம்பல் வேண்டாம், முக்கியமாக தன்னைப் பார்க்கக் கூட யாரும் வரவேண்டாம் என்றெல்லாம் அஜீத் என்னதான் புரட்சிகரமாக அறிக்கை விட்டாலும், அவரது ரசிகர்கள் தங்கள் ஆர்ப்பாட்டத்தை நிறுத்துவதைக் காணோம்.

    இத்தனை நாள் படம் ரிலீஸாகும் போது அஜீத்தின் கட் அவுட்டுக்கு பூ மழை, பால் அபிஷேகம் மற்றும் பீர் அபிஷேகம் செய்து தங்கள் அபிமானத்தைக் காட்டி வந்த அஜீத்தின் ரசிகர்கள் இப்போது இன்னொரு படி மோலே போய் பொதுமக்களுக்கு இன்னல் விளைவிக்கும் மோசமான செயலில் இறங்க ஆரம்பித்துள்ளனர்.

    இதற்கு முன்பு மதுரையில் நடந்த அசல் திருவிழா நிகழ்ச்சியில், உற்சாகம் எல்லை மீறிப்போய் அரசுப் பேருந்துகள் மீது கல்லெறிய ஆரம்பிக்க, அதில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

    இப்போதும் அதே போன்ற காரியத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    மதுரையில் சில ரசிகர்கள், படத்துக்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்ற கோபத்தில் அரசு பல்கள் மீது கல் வீசி சேதம் விளைவித்துள்ளனர்.

    மதுரை காளவாசல் பகுதியில் உள்ள ஒரு தியேட்டரில் நேற்று காலை 6 மணி முதலே அஜித் ரசிகர்கள் கூடியிருந்த அஜீத் ரசிகர்களுக்கு முதல் காட்சியை காண டோக்கன் முறை அமுல்படுத்தப்பட்டிருந்ததாம்.

    ஆனால், டோக்கன் பெறாதவர்களும் படம் பார்க்க தியேட்டருக்குள் நுழைந்தனர். இதற்கு தியோட்டர் நிர்வாகம் அனுமதி மறுத்தது. இதனால் ஆவேசம் அடைந்த ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக சென்ற மூன்று பஸ்கள் மீது சரமாரியாக கற்கள் வீசி தாக்கினர். இதில் பஸ் கண்ணாடி முற்றிலும் உடைந்தது. இது குறித்து பஸ் டிரைவர்கள் கரிமேடு போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை கமலா திரையரங்கிலும் இதே போன்ற கலாட்டா நடந்துள்ளது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கிவிட்டு ஓடியுள்ளனர் அஜீத் ரசிகர்கள்.

    அசல் படப்பெட்டிக்கு கிடாய் வெட்டி பூஜை!:

    இதற்கிடையே, அசல் படப்பெட்டிக்கு கிடாய் வெட்டி பூஜை செய்துள்ளனர் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அஜீத் ரசிகர்கள்.

    அசல் திரைப்படம் தேவகோட்டையில் உள்ள திருச்சி-ராமேசுவரம் சாலையில் லட்சுமி திரையரங்கில் திரையிடப்பட்டு உள்ளது. படம் தொடங்கும் முதல் காட்சிக்கு முன்பாக ரசிகர்கள் திரையரங்கம் முன்பு ஏராளமானோர் திரண்டனர். அப்போது அங்கு கிடாய் ஒன்றை இழுத்து வந்து வெட்டி பூஜை செய்தனர்.

    அதனை தொடர்ந்து கவுன்டரில் டிக்கெட் வழங்கப்பட்டது. இதன் முதல் விற்பனையை நகரசபை துணை தலைவர் பெரி.பாலா தொடங்கி வைத்தார். முதல் டிக்கெட்டை அஜித் ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் கார்த்திக் பெற்றுக் கொண்டார்.

    நிகழ்ச்சியில் கவுன்சிலர் தமிழரசன், முன்னாள் தி.மு.க. அவைத் தலைவர் பிச்சை மைதீன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

    சினிமாவை சினிமாவாகப் பார்க்காமல், இப்படி கிறுக்குத்தனம் செய்து மக்களின் வெறுப்பைச் சம்பாதிப்பதை எப்போதுதான் நிறுத்தப் போகிறார்களோ?

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X