புவனேஸ்வரி.. கவலையில் பாரதிராஜா!

கலைஞர் டிவியில் பாரதிராஜாவின் இயக்கத்தில் ஒளிபரப்பாகி வரும் வெற்றித் தொடர் தெக்கித்திப் பொண்ணு. இந்தத் தொடரின் நாயகியாக முதலில் ரஞ்சிதா நடித்திருந்தார். ஆனால் பின்னர் அவர் விலகிக் கொள்ளவே புவனேஸ்வரியை நடிக்க வைத்தார் பாரதிராஜா.
இந்தத் தொடர் புவனேஸ்வரிக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தது. இந்த நிலையில் திடீரென விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறி புவனேஸ்வரியை போலீஸார் கைது செய்து கொண்டு சென்று விட்டனர்.
இதனால் தெக்கித்திப் பொண்ணு தொடரில் தொடர்ந்து புவனேஸ்வரி நடிப்பாரா என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது. பாரதிராஜாவும் இதுதொடர்பாக குழப்பத்தில் இருப்பதாக தெரிகிறது.
ஒரு வேளை, புவனேஸ்வரி ஜாமீனில் ரிலீஸாகி வந்தாலும் கூட தொடர்ந்து அவரை நடிக்க வைத்தால், தமிழகத் தாய்மார்கள் என்ன நினைப்பார்கள் என்ற குழப்பமும் அவருக்கு ஏற்பட்டுள்ளதாம்.
இதனால் விரைவில் புவனேஸ்வரி மாற்றப்படக் கூடும் என்ற பேச்சும் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











