சில்க் படத்துக்குத் தடை!

By Staff

Silk Smitha
சில்க் ஸ்மிதா கடைசியாக நடித்த படத்துக்கு சென்சார் தடை

தமிழ்த் திரையுலகின் கவர்ச்சிக் கன்னியாக பல காலம் விளங்கிய சில்க் ஸ்மிதா கடைசியாக நடித்த தங்கத்தாமரை என்ற படத்திற்கு சான்றிதழ் வழங்க சென்சார் வாரியம் மறுத்து விட்டது.

பல ஆண்டுகளுக்கு முன்பு தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார் சில்க் ஸ்மிதா. தமிழ்த் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் சில்க். அவரது கவர்ச்சிக்கு ரசிகர்களைப் போலவே திரையுலகமும் கிறங்கிக் கிடந்தது.

அத்தனை முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளால் சில்க். தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் பிசியாக நடித்து வந்தவர் சில்க்.

அவர் கடைசியாக நடித்த படம் தங்கத்தாமரை. இப்படத்தை திருப்பதி ராஜா இயக்கியுள்ளார். விஜயன் என்பவர் ஜோடியாக நடித்துள்ளார். இதுவரை இந்தப் படம் வெளியாகாமல் இருந்து வந்தது.

படத்தை ரிலீஸ் செய்ய முடிவெடுத்த திருப்பதிராஜா, அதை தணிக்கை வாரியத்திற்கு அனுப்பி வைத்தார்.

ஆனால் படத்தைப் பார்த்த தணிக்கை வாரியம், இப்படத்தில் ஜாதிக் கலவரம் ஏற்படக் கூடிய வகையிலான காட்சிகள் இருப்பதாக கூறி அந்தக் காட்சிகளை நீக்க கூறியது. மேலும், எம்.ஜி.ஆர்., அண்ணா, காமராஜர் ஆகியோரின் படங்கள் படத்தில் இடம் பெற்றிருப்பதற்கும் தணிக்கை வாரியம் ஆட்சேபனை தெரிவித்துள்ளது.

இவற்றை நீக்கினால்தான் சான்றிதழ் தர முடியும் என்று தணிக்கை வாரியம் கூறி விட்டதாம்.

ஆனால் இந்த நீக்கத்திற்கு திருப்பதிராஜா மறுத்து விட்டாராம். மறு ஆய்வுக் கமிட்டிக்குப் படத்தை அனுப்பப் போவதாக அவர் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X