தீபாவளி-தியேட்டர்களில் 1 வாரத்திற்கு 5 காட்சிகள்

இது குறித்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ராம அண்ணாமலை, பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் கூடுதல் காட்சிகளைத் திரையிட நடத்த தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தமிழக அரசை கேட்டுக் கொண்டது.
இதை ஏற்று தமிழக அரசு 8ம் தேதி முதல் 11ம் தேதி வரை அனைத்து திரையரங்குகளிலும் 5 காட்சிகளுக்கு அனுமதி அளித்துள்ளது.
அரசு விடுமுறை தினங்களான 5, 6, 7 ஆகிய தேதிகளிலும் கூடுதலாக ஒரு காட்சி நடத்தலாம்.
இதேபோன்று நடமாடும் திரையரங்குகள் (டூரிங் டாக்கீஸ்) 5, 6, 7 ஆகிய தேதிகளில் காலைக் காட்சிகளும், வரும் 8ம் தேதி முதல் 11ம் தேதி வரை மேட்னி காட்சிகளும் நடத்த அரசு அனுமதியளித்துள்ளது.
கூடுதல் காட்சிகள் நடத்துவோர் இந்த தகவலை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் கேளிக்கை வரி அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











