For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜெமினி டிவியில் சங்கராந்தி ஸ்பெஷலாக 'ரோபோ'!

    By Chakra
    |

    சன் குழுமத்தின் தெலுங்குச் சேனலான ஜெமினியில் பொங்கலுக்கு சிறப்புத் திரைப்படமாக சூப்பர்ஸ்டாரின் ரோபோ ஒளிபரப்பாகிறது.

    எந்திரன் படத்தின் டப்பிங்தான் ரோபோ என்றாலும், ஒரு நேரடி தெலுங்குப் படம் கூட நினைத்துப் பார்க்க முடியாத பெரும் வசூல் சாதனையைச் செய்தது தெலுங்கு ரோபோ. இன்னும் கூட ஆந்திராவின் ஹைதராபாத், திருப்பதி உள்ளிட்ட இடங்களில் நூறாவது நாளை நோக்கி வெற்றி நடை போடுகிறது எந்திரன்.

    இந்த நிலையில், வரும் பொங்கலுக்கு சிறப்புத் திரைப்படமாக ரோபோவை ஒளிபரப்பத் திட்டமிட்டுள்ளது சன் நெட்வொர்க். தெலுங்கின் நம்பர் ஒன் சேனலாகத் திகழும் சன் குழுமத்தின் ஜெமினி டிவியில் வரும் ஜனவரி 15-ம் தேதி மகா சங்கராந்தி ஸ்பெஷலாக ஒளிபரப்புகிறார்கள்.

    ஆந்திராவைப் பொறுத்தவரை கடந்த தீபாவளி மட்டுமல்ல... இந்த ஆண்டு பொங்கலும் ரஜினியின் ரோபோ ஸ்பெஷல்தான்!

    நாளை மறுதினம் 100வது நாள் காணும் ரோபோ, அடுத்த ஒரே வாரத்தில் டிவியில் ஒளிபரப்பாகிறது.

    English summary
    Indian Super Star Rajinikanth, Former Miss World Aishwarya Rai starrer science fiction ‘Robot’ directed by S Shankar is going to be telecasted in Gemini TV on January 15 on the occasion of Sankranthi.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X