பாரதிராஜா ஒட்டுமொத்த திரையுலக தலைவரா?-முக்தா

மூத்த காங்கிரஸ் தலைவருமான அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
சினிமா டைரக்டர் பாரதிராஜா திடீரென முன்பு இல்லாத அளவுக்கு காங்கிரஸ் விரோத மனோபாவத்தில் உள்ளார். திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கம் என்ற ஒரு அமைப்பை தொடங்கி அதன் அமைப்பாளராகவும் இருந்து வருகிறார்.
இந்தப் பெயர், முழு திரையுலகத்தையும் குறிக்கும் வகையில் உள்ளது. 62 ஆண்டுகள் சினிமா துறையில் உள்ளவன் என்ற வகையில், இந்த பெயரில் இயக்கம் தொடங்கி இருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.
திரையுலகத்தின் ஒரே உரிமையாளர் பாரதிராஜாவா?. அவருக்கு யார் இந்த அதிகாரம் தந்தது?. எனவே, முதலில் பாரதிராஜா தனது அமைப்பின் பெயரை உடனடியாக மாற்ற வேண்டும். பெயரை மாற்றாவிட்டால், பெயரை மாற்றச் சொல்லி எந்தெந்த வழியில் எல்லாம் முடியுமோ அந்த வழியில் எல்லாம் நிர்பந்தம் செய்வோம். சட்டரீதியாகவும் நடவடிக்கை எடுப்போம்.
காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கக்கூடாது என்று பிரசாரம் செய்யும் பாரதிராஜா, 16 தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்களை தோற்கடிக்கப் போவதாக கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்.
பாரதிராஜா எந்த கட்சியையும் சார்ந்தவராகவும் இருக்கலாம். யாருக்காகவும் பிரசாரம் செய்யலாம். பிடித்தவர்களுக்கு ஓட்டுப் போடலாம். ஜனநாயக நாட்டில் அது அவரது உரிமை. ஆனால், ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகத்தின் தலைவரைப் போல அவர் பேசுவதை ஏற்க முடியாது.
ஈழத் தமிழர்கள் பாதுகாப்பாக வாழ வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் அல்ல. ஒட்டுமொத்த இந்தியாவிற்குமே அக்கறை உண்டு. இலங்கை தமிழர்களைப் பாதுகாக்க அனைத்து வழிகளிலும் காங்கிரஸ் அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.
காமராஜர் கட்டி காத்த காங்கிரஸ் பேரியக்கத்தை பாரதிராஜாவால் மட்டுமல்ல அவரது அப்பா, தாத்தாவாலும் ஒன்றும் செய்ய முடியாது.
தமிழ்நாட்டிற்கு சோனியா காந்தி வரக்கூடாது என்று உத்தரவு போடுவதற்கு பாரதிராஜாவிற்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்றார்.


Click it and Unblock the Notifications











