twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கலைஞரின் அடுத்த 'ரிலீஸ்': சிரிப்பொலி, சித்திரம்!

    By Staff
    |

    Kalaignar TV New channels
    கலைஞர் தொலைக்காட்சி மேலும் இரு புதிய சேனல்களை அறிமுகப்படுத்துகிறது.

    நகைச்சுவை நிகழ்ச்சிகளுக்காக சிரிப்பொலி என்ற சேனலையும், சிறுவர்களுக்காக சித்திரம் எனும் புத்தம் புதிய சேனலையும் விரைவில் ஒளிபரப்ப உள்ளது.

    2007-ம் ஆண்டு துவங்கப்பட்ட கலைஞர் தொலைக்காட்சி மிக்க்குறுகிய காலத்தில் தமிழ் தொலைக்காட்சிகளுள் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. தமிழ் தொலைக்காட்சிகளைப் பொறுத்தவரை 64 சதவிகித மார்க்கெட்டைப் பிடித்து முதலிடத்தில் இருப்பது சன் குழும சேனல்கள்தான்.

    அதற்கடுத்து கலைஞர் தொலைக்காட்சி 14 சதவிகித மார்கெட் மதிப்பைப் பெற்றுள்ளது. விஜய், ஜெயா தொலைக்காட்சிகள் தலா 7 சதவிகிதம் மட்டுமே பெற்றுள்ளன. வித்தியாசமான நிகழ்ச்சிகளை வழங்கும் மக்கள் தொலைக்காட்சிக்கு 3 சதவிகிதம் மட்டுமே கிடைத்துள்ளது.

    தற்போது கலைஞர் இசையருவி, கலைஞர் செய்திகள் எனும் இரு கூடுதல் சேனல்களுடன் இயங்கி வருகிறது. கலைஞர் செய்தி சில தினங்களுக்கு முன்புதான் துவங்கப்பட்டது. இது 24 மணி நேர செய்திச் சேனல்.

    அடுத்து முழுக்க முழுக்க நகைச்சுவை நிகழ்ச்சிகள், நாடகங்கள் மற்றும் திரைத் துணுக்குகளை மையமாகக் கொண்ட 24 மணிநேர நகைச்சுவை சேனலை அறிமுகப்படுத்துகிறது கலைஞர். இந்த சேனல் முற்றிலும் இலவசமாகக் கிடைக்கும். எஸ்வி சேகர், சோ போன்ற பிரபல நாடக ஆசிரியர்களின் புகழ்பெற்ற நாடகத் தொடர்களும் இதில் ஒளிபரப்பாக உள்ளது.

    அதேபோல சிறுவர்களுக்காக சித்திரம் எனும் 24 மணி நேர கார்ட்டூன் மற்றும் சிறுவர் நிகழ்ச்சி சேனலும் ஆரம்பிக்கப்பட உள்ளது. இத்தகவல்களை கலைஞர் தொலைக்காட்சியின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X