'குசேலன்' ஒரு வாரம் 'லேட்'!

ஜூலை மாதம் 25-ம் தேதி வெளியாவதாக இருந்த குசேலன் இப்போது ஆகஸ்ட் முதல் வாரம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
படப்பிடிப்புக்குப் பிந்தைய வேலைகளில் இன்னும் கொஞ்சம் பாக்கியிருப்பதாலும், சில புதிய காட்சிகளைச் சேர்க்க இயக்குநர் வாசு திட்டமிட்டிருப்பதாலும் இந்தத் தாமதம் என்று சொல்லப்படுகிறது.
மேலும் படத்தை வாங்கியுள்ள பிரமிட் சாய்மிரா நிறுவனம், சிவாஜிக்கு இணையான பிரமாண்ட ரிலீசாக குசேலனை வெளியிட வேண்டும் என விரும்புகிறது. முதலில் 1000 பிரதிகள் வெளியிட்டால் போதும் என்றுதான் சாய்மிரா திட்டமிட்டிருந்த்து.
பின்னர், படத்தின் பிரமாண்டம் மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினியின் பங்களிப்பு ஆகியவற்றைப் பார்த்த சாய்மிரா, இன்னும் இண்டு வாரங்கள் கழித்து 1200 பிரதிகளுடன் உலகமெங்கும் பிரமாண்டமாக படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.
முதல் முறையாக வட மாநிலங்களில் வெளியிட 100 பிரதிகள் தயாராகிக் கொண்டிருக்கின்றன. இவை அனைத்தும் இந்தி சப் டைட்டில்களுடன் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் சிவாஜி, தசாவதாரம் வரிசையில் அதிக பிரிண்டுகளுடன் வட மாநிலங்களில் வெளியாகும் படம் என்ற பெருமையைப் பெறுகிறது குசேலன்.
லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வாங்க... !


Click it and Unblock the Notifications











