அதிசய ராகத்தில் மாதங்கி!

இசையும், இனிமையும் சேர்ந்த அதிசயராகம் தொடர்ந்து 42 வாரங்களை கடந்து இசைப்பிரியர்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சி இனி வரும் வாரங்களில் புதுப்பொலிவுடன் ஜொலிக்க உள்ளது.
தற்பொழுது புதிய அரங்கத்தில் புதிய முறையில் மாதங்கியின் மயக்கும் இன்னிசை குரலில் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியில், இசைத்துறையில் பிரபலமானவர்களைப் பற்றியும், இசை தவிர்த்த மற்ற விஷயங்களில் அவர்களுக்கு உள்ள ஆர்வங்களை பற்றியும், அவர்களின் உணர்வைத் தொட்ட உள்ளம் கவர்ந்த பாடல்கள் பற்றியும் சுவாரசியமான அனுபவங்கள் பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.
பிரபல திரைஇசை பாடகர்களின் சுவையான அனுபவங்களை இனிமையாக பகிர்ந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில், அவர்கள் பாடிய பாடல்கள் மட்டும் அல்லாது தங்களுக்கு விருப்பமான மற்றவர்கள் பாடிய பாடல்களையும் சேர்த்து பாடி பார்வையாளர்களை அசர வைக்கின்றன.
இனி வரும் வாரங்களில் கிருஷ்ணராஜ், உன்னிமேனன் உள்ளிட்ட பிரபல பின்னணி பாடகர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்ள உள்ளனர்.


Click it and Unblock the Notifications











