twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    குஷ்பு வழக்குக்குத் தடை

    By Staff
    |

    Kushboo
    இந்துக்களின் மனதைப் புண்படுத்தும்படி நடந்துகொண்டதாக கூறி நடிகை குஷ்பு மீது தொடரப்பட்டுள்ள வழக்கை விசாரிக்க மதுரை உயர்நீதிமன்றக் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.

    சென்னையில் நடந்த வல்லமை தாராயோ பட ஆடியோ வெளியீட்டு விழாவின்போது இந்து தெய்வ சிலைகளுக்கு அருகே கால் மேல் கால் போட்டபடி அமர்ந்திருந்ததாக குஷ்பு மீது சர்ச்சை எழுந்தது.

    அவருக்கு எதிராக வழக்குகளும் தொடரப்பட்டன. இதேபோல பழனி அருகே உள்ள ஆயக்குடியைச் சேர்ந்த இந்து மக்கள் கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் என்பவர் பழனி கோர்ட்டில் குஷ்பு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த பழனி நீதிமன்றம் வருகிற 10ம் தேதி குஷ்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என சம்மன் அனுப்பியிருந்தது.

    இந்த நிலையில் இவ்வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் குஷ்பு சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பெரியகருப்பையா, பழனி கோர்ட்டில் நிலுவையில் உள்ள குஷ்பு மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தார். மேலும், குஷ்பு நேரில் ஆஜராவதிலிருந்து விலக்களித்தும் அவர் உத்தரவிட்டார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X