மக்கள் டிவியின் 'மக்கள் விருது'!

By Staff

Ramdoss
தமிழ் தொலைக்காட்சிகளில் ரொம்பவே வித்தியாசமாக செயல்படுவது மக்கள் தொலைக்காட்சி.

சினிமாவை மட்டும் சார்ந்து இயங்காமல் நல்ல தமிழில், பல பயனுள்ள நிகழ்ச்சிகளை மக்கள் தொலைக்காட்சி வழங்கி வரும் மக்கள் தொலைக்காட்சி, இந்த ஆண்டு முதல் மக்கள் விருதுகள் எனும் விருதுகளை வழங்கவுள்ளது.

'மண்பயனுற வேண்டும்' என்ற முழக்கத்தோடு தொடங்கப்பட்ட இந்த மக்கள் இப்போது மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இந் நிலையில் இதன் நிறுவனரான டாக்டர் ராமதாஸ் பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியிட்ட அறிவிப்பு:

உலகமெங்கும் உள்ள சாதனைத் தமிழர்களை அடையாளங்கண்டு பாராட்டும் விதமாக மக்கள் விருதுகளை வழங்க திட்டமிட்டுள்ளோம். அதன்படி 2008ம் ஆண்டின் தமிழகத்தின் 31 துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு "மக்கள் விருது" வழங்கி சிறப்பிக்க உள்ளோம்.

சிறந்த நாளிதழ், கல்லூரி, சிற்பி, வார இதழ், இசையறிஞர், பதிப்பகம், நாடகம், விவசாயி, சிற்றிதழ், நாடகவியலாளர், அறிவியலாளர், எழுத்தாளர், திரைப்படம், இளம் விஞ்ஞானி, சிறந்த தமிழ்ப் பணி, குறும்படம், வணிகவியலாளர், கல்வியாளர், ஆவணப் படம், மருத்துவர், சிறந்த பள்ளி, ஓவியர், சுற்றுச் சூழலியலாளர், சுய உதவிக் குழு, முன் மாதிரி கிராமம், விளையாட்டு வீரர், மாற்று திறனாளர், மழலை மேதை, மக்கள் பணியாளர், சிறந்த குடிமகன், தமிழரல்லாத தமிழ்ப் பணியாளர் போன்ற துறைகளில் விருதுபெறும் 31 பேரை தேர்வு செய்ய 20 பேர் கொண்ட குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டு தேடல் பணி நடைபெற்றது.

விருதுகள் வழங்க உள்ள துறையின் வித்தகர்களைக் கொண்டு பெயர்கள் சேகரிக்கப்பட்டன.

மக்கள் விருது 2008க்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த 32 பேருக்கு வரும் 12ம் தேதி சென்னை ராஜா அண்ணாமலைபுரம் செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில் நடைபெறும் விழாவில் விருதுகள் வழங்கப்படுகின்றன.

மத்திய மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் இந்த விருதுகளை வழங்குகிறார்.

இதுமட்டுமின்றி தமிழர்களுக்காக தொடங்கப்பட்ட மக்கள் தொலைக்காட்சி தமிழ்ப் புத்தாண்டான தைத் திருநாளையொட்டி பேரதிர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப உள்ளது.

போகி தமிழ்ப் புத்தாண்டு என்று தொடங்கும் பொங்கல் கொண்டாட்டத்தில் நான்கு நாட்கள் வண்ணமயமான நிகழ்ச்சிகளை அள்ளி வழங்க உள்ளோம்.

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய திணைகளின் பெயரில் மாபெரும் அரங்குகள் அமைக்கப்பட்டு நிகழ்ச்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

வண்ணமயமான உள் அரங்குகள், வெளிப்புற படப்பிடிப்புகள், மலேசியா நாட்டிற்குச் சென்று பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் என்று தொலைக்காட்சி வரலாற்றில், இதுவரை இல்லாத அளவிற்கு 96 மணி நேரம் தொடர்ந்து ஒளிபரப்பாக உள்ளது.

கின்னஸ் முயற்சி...:

இந்த 96 மணி நேர நிகழ்ச்சிகள் ஆண்டு முழுவதும் மக்கள் மனதில் நிற்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இதன் தொடர்ச்சியாக அடுத்த ஆண்டு தமிழ்ப் புத்தாண்டின் போது தொடர் நிகழ்ச்சிகளின் மூலம் கின்னஸ் சாதனை நிகழ்த்தும் திட்டமும் மக்கள் தொலைக்காட்சியிடம் இருக்கிறது.

பொங்கலுக்குப் பின்னர் நிகழ்ச்சிகளில் மாற்றங்கள் பல செய்யப்பட்டு புதிய பொலிவுடன் அடையாளம் மாறாமல் தமிழர்களின் மனங்களை மக்கள் தொலைக்காட்சி கவர இருக்கிறது என்றார் ராமதாஸ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X