ரூ120 கோடி..மணியின் நவீன ராமாயணம்!

By Staff

Aishwarya Rai with Abhishek Bachchan
இந்தியாவின் மிகச்சிறந்த இயக்குநர்களில் ஒருவராகப் புகழப்படும் மணிரத்னம் தனது அடுத்த படத்தின் படத்துக்கு தயாராகிவிட்டார்.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் தயாராகும் இந்தப் படத்துக்கு இந்தியில் ராவண் (ராவணன்) எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களின் தலைப்புகளும் ராவணன் என்றே வைக்கப்படக்கூடும் எனக் கூறப்படுகிறது.

இந்தப் படம் ராமாயணக் கதையின் நவீன வடிவமாக இருக்கும் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

ராமராக அபிஷேக் பச்சனும், அவர் மனைவி சீதையாக ஐஸ்வர்யா ராயும் நடிக்கிறார்களாம். முக்கிய வேடம் ஒன்றில் அமிதாப்பை நடிக்க வைக்கவும் முயன்று வருகிறார் மணிரத்னம்.

ராவணன் எனும் பவர்புல் வில்லன் பாத்திரத்தில் ஆதித்ய பஞ்சோலியும் அனுமானாக கோவிந்தாவும் நடிக்கவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் படத்தின் தமிழ்ப் பதிப்பில் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராயுடன் விக்ரம் மற்றும் கார்த்திக் இருவரும் நடிக்கப் போவதாகக் கூறப்படுகிறது. இவர்களில் ராவணன் யார், அனுமான் யார் என்பது மட்டும் இன்னும் முடிவாகவில்லை.

இந்தப் படம் புராண ராமாயணம் கிடையாது. அதே நேரம் அந்தப் பாத்திரங்களை நினைவூட்டுகிற விதத்தில் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளதாக மெட்ராஸ் டாக்கீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் படத்தின் பட்ஜெட் கிட்டத்தட்ட ரஜினியின் ரோபோவுக்கு நிகராக இருக்குமாம். காரணம் மிகச் சமீபத்தில்தான் மணிரத்தனமும் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனமும் இந்தப் படம் தயாரிப்புக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அதன்படி ரூ.120 கோடி செலவில் பிரம்மாண்டமாக உருவாகிறது இந்தப் படம்.

ஏற்கெனவே, மகாபாரத்தைத் தழுவி அதன் நவீன வடிவமாக தளபதி படத்தை எடுத்தவர் மணிரத்னம் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்க ராமாயணத்துல 'சேது' வருமா மணி சார்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X