twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மன்சூர் அலிகானின் 'தமிழ்ப் பேரரசு' கட்சி!

    By Staff
    |

    Mansoor ali khan
    'தமிழ்ப் பேரரசு' என்ற கட்சியை ஆரம்பிக்கிறார் நடிகர் மன்சூர் அலிகான்.

    இது குறித்து திருச்சியில் நிருபர்களிடம் பேசிய அவர்,

    ஈழத்தமிழர் பிரச்சினையில் அனைத்து அரசியல் கட்சிகளும் நாடகமாடுகின்றன. இலங்கையில் ஆயிரக்கணக்கான பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள். இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காங்கிரசுடன் சேர்ந்து திமுகவும் இலங்கையில் போரை நிறுத்த வேண்டும் என்று சொல்கிறது. ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.

    ஈழதமிழர் படுகொலையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் சார்பில் கொள்ளிடத்தில் இருந்து கும்பகோணம் வரை நடை பயணம் நடத்தப்பட்டது. நானும் அதில் பங்கேற்றேன். இப்போது காங்கிரஸ் வாழ்க என்று விடுதலை சிறுத்தைகள் கூறிக்கொண்டு அவர்கள் பின்னால் செல்கிறார்கள். மக்களை ஏமாற்றி பார்க்கிறார்கள். ஆனால் உண்மையான தமிழ் மக்கள் ஏமாற மாட்டார்கள்.

    இலங்கை தமிழர்கள் படுகொலைக்கு மத்திய அரசில் அங்கம் வகிக்கும் திமுகவுக்கும், பாமகவுக்கும் முழு பொறுப்பு உண்டு.

    நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு நான் சில தொகுதிகளில் கருத்து கணிப்பு நடத்தி மக்களின் எண்ணங்களை தெரிந்து கொண்டேன். ஒரு காலத்தில் அரசியல் பிரமுகர்கள் ஊழல் பெருச்சாளிகளாக இருந்தார்கள். அவர்கள் ஊழல் காண்டாமிருகமாக மாறி வருவதை மக்கள் விரும்பவில்லை.

    எவ்வித ஆதாயத்தை எதிர்ப் பாக்காமல் மக்கள் எண்ணங்களை பூர்த்தி செய்ய 'தமிழ்ப் பேரரசு' என்ற அரசியல் கட்சியை இன்னும் 6 மாதத்துக்குள் தொடங்குவேன்.

    வரும் தேர்தலில் தனி ஆளாக நின்று போட்டியிடுவேன். திமுக, பாமக, தேமுதிக போட்டியிடும் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடுவேன் என்றார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X