ரியாலிட்டி ஷோவில் மிஷல் ஒபாமா

ஒபாமாவின் மனைவி மிஷல் பல வகையிலும் படு வித்தியாசமானவராக இருக்கிறார். அவரது உடை அழகு ஏற்கனவே பேஷன் டிசைனர்களின் பாராட்டுக்களை அள்ளிக் குவித்து வருகிறது.
இந்த நிலையில் டிவி ரியாலிட்டி ஷோ தொடர் ஒன்றில் பங்கேற்கப் போகிறார் மிஷல்.
இங்கிலாந்தைச் சேர்ந்த சமையல் கலை நிபுணர் நிகெல்லா லாசன் நடுவராக செயல்படும் அயர்ன் செப் அமெரிக்கா என்ற ஷோவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கப் போகிறார் மிஷல்.
சமீபத்தில் இதன் படப்பிடிப்பு வெள்ளை மாளிகையில் நடந்தது. இந்தப் பகுதி, வருகிற ஜனவரி 1ம் தேதி புத்தாண்டு தினத்தன்று ஒளிபரப்பாகிறதாம்.
இந்த நிகழ்ச்சிக்காக வெள்ளை மாளிகை காய்கறித் தோட்டத்திலிருந்து பறித்த காய்கறிகளைக் கொண்டு சமையல் செய்துள்ளாராம் மிஷல்.
ஆரோக்கியமாக வாழ்வது என்ற பிரசாரத்தில் ஏற்கனவே மிஷல் இறங்கியுள்ளார். இந்த ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றால் தனது பிரசாரத்திற்கு நல்ல விளம்பரம் கிடைக்குமே என்பதால்தான் சிறப்பு விருந்தினராக பங்கேற்க சம்மதித்தாராம்.
இந்த சமையல் ரியாலிட்டி ஷோவுக்கு அமெரிக்காவில் கிட்டத்தட்ட பத்தரை லட்சம் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சியின்போது குழந்தைகள் காய்கறிகளை சாப்பிடுவதன் அவசியம் குறித்து அழகாக விளக்கிப் பேசியுள்ளாராம் மிஷல்.
இந்த ஷோவில் மிஷல் தவிர வெள்ளை மாளிகை ஊழியர்கள் சிலரும் கூட பங்கேற்றுள்ளனராம்.
ஆனால் இந்த நிகழ்ச்சி விரைவில் சலசலப்பை ஏற்படுத்தும் என பேச்சு எழுந்துள்ளது. காரணம், வெள்ளை மாளிகை, ஹாலிவுட் பிரபலங்களுடன் மிகவும் நெருக்கமான தொடர்புகளை ஏற்படுத்தி வருவதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது.
ஒபாமா அதிபராகப் பதவியேற்ற பின்னர் வெள்ளை மாளிகைக்கு விசிட் அடித்த பிரபலங்களில் ஹாலிவுட்டினர்தான் அதிகமாம். ஓப்ரா வின்பிரே, ஜார்ஜ் க்ளூனி, பிராட் பிட், டென்சல் வாஷிங்டன் என இந்தப் பட்டியல் நீளுகிறது.
இந்த நிலையில் மிஷல் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றுள்ளது கட்டாயம் அங்கு அதிருப்தி அலைகளைப் பரப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











