இசைப் புயலுக்கு 45 வயது

இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இன்று தனது 45வது பிறந்த நாளை எளிமையாக கொண்டாடினர். கடந்த 2009ம் ஆண்டு அடுத்தடுத்து கோல்டன் குளோப், ஆஸ்கர் விருதுகளை அள்ளியது போல இந்த ஆண்டும் அவர் தனது 127 ஹவர்ஸ் படத்துக்காக இந்த விருதுகளை மீண்டும் பெறுவார் என்ற நம்பிக்கையுடன் ரஹ்மான் ரசிகர்கள் உள்ளனர்.
இந்தியாவின் இசைப் புயல் ரஹ்மானுக்கு இன்று 45 வயது பிறந்தது. இதை அவர் எளிமையாக கொண்டாடியதாக தகவல்கள் கூறுகின்றன. ரஹ்மானின் ரசிகர்களும் அவருக்கு வாழ்துத்துகளைத் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2009ம் ஆண்டு ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக கோல்டன் குளோப் மற்றும் ஆஸ்கர் விருதுகளைத் தட்டிச் சென்றார் ரஹ்மான். அதேபோன்ற ஒரு சூழல் இந்த ஆண்டும் ரஹ்மானுக்கு வந்துள்ளது.
ஸ்லம்டாக் படத்தை இயக்கிய பாயிலின் இயக்கத்தில் உருவாகியுள்ள 127 ஹவர்ஸ் படத்திற்கு ரஹ்மான் இசையமைத்துள்ளார்.இப்படம் கோல்டன் குளோப், ஆஸ்கர் விருதுகளுக்கான போட்டியில் உள்ளது.
எனவே ரஹ்மான் இந்த முறையும் போட்டியில் வெல்வார் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளனர்.
2 கிராமி, 2 ஆஸ்கர் மற்றும் ஒரு கோல்டன் குளோப் விருதுகளை ஏற்கனவே வென்றவர் ரஹ்மான். இவ்வளவு விருதுகளை வென்ற ஒரே இந்தியரும் கூட.
கடந்த ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டிக்கான தீம் பாடலான ஸ்வாகதம் பாடலுக்கு ரஹ்மான்தான் இசையமைத்திருந்தார். ஆனால் இது பெரும் விமர்சனத்தையும், தோல்வியையும் சந்தித்ததால் ரஹ்மான் ரசிகர்கள் வருத்தமடைந்திருந்தனர். அதைத் துடைக்கும் வகையில் இந்த ஆண்டுக்கான கோல்டன் குளோப், ஆஸ்கர் விருதுகளை அவர் வெல்லலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications











