ஏப்ரலுக்கு பட்டாளம்!

இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் மீடியா லிமிடெட் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள படம் 'பட்டாளம்'. இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகும் ரோஹன், பிரியதர்ஷன், சந்தோஷ் சிவன் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியவர் என்பதால் அதிக எதிர்பார்ப்பு உள்ளது.
இந்தப் படத்தில் நதியா பள்ளிகூட டீச்சராக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவருடன் 8 புதுமுகங்கள் அறிமுகமாகி உள்ளனர். இந்தப் படத்தின் ஆடியோ கடந்த டிசம்பரில் வெளியிடப்பட்டது.
பொங்கலுக்கு படம் ரிலீசாகும் என எதிர்பார்த்த நிலையில் அது பிப்ரவரி மாதத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பிப்ரவரிக்கு பதிலாக ஏப்ரலில் வெளியிட போவதாக அதன் தயாரிப்பாளர்களில் ஒருவரும் லிங்குசாமியின் சகோதரருமான சுபாஷ் சந்திர போஸ் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,
படத்தை கடந்த வாரம் வெளியிட வேண்டும் என விரும்பினோம். ஆனால், அதற்குள் இப்படத்தை போலவே அதிக இளம் நடிகர்களுடன் எடுக்கப்பட்ட வெண்ணிலா கபடி குழு திரைக்கு வந்துவிட்டது. அதனால், படத்தை ஏப்ரலில் வெளியிட இருக்கிறோம். அதில் எந்த மாற்றமும் இருக்காது. நிச்சயம் ஏப்ரலில் வெளிவந்துவிடும் என்றார்.
ஏப்ரலில் கோடை விடுமுறை வந்துவிடும் என்பதால் வசூலை அள்ளலாம் எனவும் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications











