வன்முறை - பயம் அறியானுக்கு ஆட்சேபம் - 5 இடங்களில் வெட்டு

ஜெயமதி பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் கே.சற்குணராஜா, பயம் அறியான் என்ற படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தின் நாயகன் மகேஷ்ராஜா. நாயகி உதயதாரா. முக்கிய வேடத்தில், வெண்ணிலா கபடிக் குழு நடிகர் கிஷோர் நடித்துள்ளார். பிரதீஷ் டைரக்டு செய்து இருக்கிறார்.
படத்தை தணிக்கை செய்வதற்காக சென்சாருக்கு அனுப்பி வைத்தனர். படத்தைப் பார்த்த தணிக்கைக் குழு அதிகாரிகள் வன்முறைக் காட்சிகள் படம் முழுக்க இருப்பதாக கூறி ஏ சான்றிதழ் அளித்தனர். மேலும் ஐந்து இடங்களில் வசனத்தையும் வெட்டி உத்தரவிட்டனர்.
Comments


Click it and Unblock the Notifications