பாலிவுட் போகிறது பிதாமகன்

இப்படத்தின் ரீமேக் உரிமையை வாங்க பலரும் போட்டா போட்டி போட்ட போதும் கெளசிக்கிற்கு தான் வெற்றி கிடைத்துள்ளது.
பாலிவுட்டில் பல வெற்றி படங்களை தந்த கெளசிக் தான் பாலாவின் சேது படத்தை இந்தியில் சல்மான், பூமிகா ஜோடியை வைத்து தேரே நாம் என்ற பெயரில் மீண்டும் எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
விக்ரமுக்கு தேசிய விருது வாங்கி தந்த இந்த படத்தின் இந்தி பதிப்பில் அந்த பாத்திரத்தில் நடிக்க இருப்பவர் சஞ்சய் தத். சூர்யா உள்ளிட்ட மற்ற பாத்திரங்களுக்கான தேர்வுகளும் சுறுசுறுப்பாக நடந்து வருகிறது.
Comments
இந்தி சஞ்சய் தத் சதிஷ் கௌசிக் பாலா பாலிவுட் பிதாமகன் விக்ரம் bala bollywood hindi pithamagan sanjay dutt sathish koushik vikram


Click it and Unblock the Notifications