சிரஞ்சீவி கட்சித் தலைவியை மணந்தாரா பிரகாஷ் ராஜ்?

பிரகாஷ் ராஜுக்கும், அவரது மனைவிக்கும் இடையே கருத்து மோதல் முற்றி இருவரும் பிரிந்து தனித் தனியே வாழ்ந்து வருகின்றனர்.
பிரகாஷ் ராஜுடன் இணைத்து பல்வேறு நடிகைகள், பெண்கள் பேசப்பட்டனர். அவர்களில் ஒருவரைத்தான் பிரகாஷ் ராஜ் கல்யாணம் செய்து கொள்ளப் போவதாகவும் கூட பேசப்பட்டது.
இந்த நிலையில் ஆந்திராவைச் சேர்ந்த, சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்ஜியம் கட்சியின் மகளிர் அணித் தலைவி ஷோபா ராணியை, பிரகாஷ் ராஜ் ரகசியத் திருமணம் செய்து கொண்டதாக பரபரப்பு செய்தி வெளியாகியுள்ளது.
சென்னையில் வைத்து இருவரும் சமீபத்தில் கல்யாணம் செய்து கொண்டனராம். இதை உறுதிப்படுத்த பிரஜா ராஜ்ஜியம் கட்சி வட்டாரம் மறுத்து விட்டது. பிரகாஷ் ராஜ் தரப்பிலும் இதை உறுதிப்படுத்தவில்லை.
ஷோபா ராணி அணல் பறக்கும் பேச்சாளர் ஆவார். அவருக்கும் தெலுங்கு தேசம் கட்சியின் மகளிர் அணித் தலைவி நடிகை ரோஜாவுக்கும் இடையே ஆந்திராவில் நடந்த பரபரப்பு மேடைப் பேச்சுக்கள் வெகு பிரபலமானவை.
சென்சார் போர்டு உறுப்பினராகவும் ஷோபா ராணி இருக்கிறார். விநியோகஸ்தராகவும் இருக்கிறார். பிரகாஷ் ராஜின் இரு படங்களை இவர்தான் வாங்கி விநியோகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











