கூடைப்பந்தாட்ட அணியை உருவாக்கும் ப்ரீத்தி ஜிந்தா

இது ஜாலிக்காக விளையாட விரும்பும் ஆட்டம் இல்லை. தனது அறக்கட்டளைக்கு நிதி திரட்டுவதற்காக இந்த கூடைப்பந்தாட்ட அணியை உருவாக்குகிறார் ப்ரீத்தி. இந்த அணிக்கு ட்ரீம்கேர்ள்ஸ் என பெயர் வைக்கப் போகிறாராம் ப்ரீத்தி.
இதுகுறித்து அவர் கூறுகையில், சர்வதேச அளவில் புகழ் பெற்ற திரை நட்சத்திரங்கள், சூப்பர் மாடல்கள், சமூக சேவகர்கள் உள்ளிட்டோர் இதில் இடம் பெறுவார்கள். ஆனால் நான்தான் கேப்டனாக இருப்பேன். உலகில் உள்ள தொழில்முறை கூடைப்பந்தாட்ட அணிகளோடு இந்த அணி மோதும்.
அமெரிக்காவி்ன் பிரபல தேசிய கூடைப்பந்தாட்டக் கழகத்தைச் சேர்ந்த நிபுணர்கள் எங்களது அணிக்குப் பயிற்சி அளிக்கவுள்ளனர்.
நான் கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் ஜிம்னாஸ்டிக் கற்றுள்ளேன். ஜிம்னாஸ்டிக் எனக்கு கை வந்த கலை. இது நிறைய பேருக்குத் தெரியாது. அதேபோல 9 ஆண்டுகள் கராத்தேவும் கற்றுள்ளேன். கூடைப்பந்தாட்டத்திலும் சிறப்பாக ஆடுவேன். துப்பாக்கிச் சுடவும் தெரியும்.
எனவே எனது உயரத்தை வைத்து (அம்மணி 5 அடி 5 அங்குலம் உயரம்) என்னைக் குறைத்து எடை போட்டு விடக் கூடாது.
நான் ஐபிஎல் போட்டிக்காக பல மாதங்களை வீணடித்து விட்டதாக பலரும் கூறுகிறார்கள். ஆனால் எனது மீதமுள்ள காலத்தை கவலையின்றி கழிக்கும் வகையில் பொருளாதார ரீதியாக ஐபிஎல் எனக்கு உதவியுள்ளது.
அதற்காக நான் சினிமாவை விட்டு போகப் போகிறேன் என்று கூறக் கூடாது. பணம் முக்கியம்தான், ஆனால் அதற்கு மேலாக ஆத்மார்த்தமான திருப்தி என்று ஒன்று உள்ளதல்லவா, அது சினிமாவில்தான் கிடைக்கும்.
பணக்காரியாக சாவதை விட பணக்காரியாக வாழ்வதை நான் விரும்புகிறேன். முன்னாள் நடிகையாக நான் சாகக் கூடாது என விரும்புகிறேன். கடைசி வரை நடிக்கவே ஆசைப்படுகிறேன் என்கிறார் ப்ரீத்தி.


Click it and Unblock the Notifications