ராஜசேகர ரெட்டி கதை படமாகிறது-ரெட்டியாகிறார் டாக்டர் ராஜசேகர்

இந்தத் தகவலை ராஜசேகரே வெளியிட்டுள்ளார். இதுகுறித்து ராஜசேகர் கூறுகையில், மறைந்த முதல்வர் ராஜசேகர ரெட்டியின் கதையைப் படமாக்கவுள்ளனர். இந்த வேடத்தில் நான் ராஜசேகர ரெட்டி வேடத்தில் நடிக்கவுள்ளேன்.
இப்படத்தை இயக்குவது குறித்து பூரிஜெகன்னாத ரெட்டியிடம் பேசினோம். ஆனால்அவர் வேறு படத்தில் பிசியாக இருப்பதாக தெரிகிறது. அவர் கிடைத்தால் அவர்இயக்குவார், இல்லாவிட்டால் இன்னொருவர்இயக்குவார் என்றார் ராஜசேகர்.
தற்போது தெலுங்கில் எடுத்த படத்தை மருதாணி என்ற பெயரில் டப் செய்து வெளியிடுகிறார் ராஜசேகர். இதையடுத்து நேரடி தமிழ்ப் படம் ஒன்றில் நடிக்கப் போகிறாராம்.
Comments
ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி டாக்டர் ராஜசேகர் ராஜசேகர ரெட்டி கதை படமாகிறது drrajasekhar rajasekhara reddy


Click it and Unblock the Notifications