பாலிவுட் போகிறார் சந்தானம்!

தமிழில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துவிட்ட நகைச்சுவை நடிகரான சந்தானம் இப்போது 'சின்னூ மானூ' எனும் இந்திப் படத்தில் நடிக்கிறார்.
இந்தப் படத்தைத் தயாரிப்பவர் ஏற்கென இந்தியில் காக்கி எனும் வெற்றிப் படம் தந்தவர். இவர் மகன்தான் இந்தப் படத்தின் ஹீரோ. அவருடன் நிழலாக வரும் காமெடியன் ரோலுக்கு சந்தானத்தை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
இப்போது தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரனில் மெயின் காமெடியனாக வருகிறார் சந்தானம். இதைத் தவிர, கண்டேன் காதலை, தீராத விளையாட்டுப் பிள்ளை, அய்யனார் என பெரிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
தமிழிலிருந்து இந்திக்குப் போகும் முதல் காமெடி நடிகர் என்ற முறையில் சந்தானத்தை வாழ்த்துவோம்!
Comments


Click it and Unblock the Notifications