மே 11 முதல் சிங்கம் இசை!

படத்தின் வெளியீட்டு வேலைகளைத் துவங்கியுள்ள சன், அதன் முதல் கட்டமாக இசை வெளியீட்டு விழாவை நடத்துகிறது. வரும் மே 11-ம் தேதி இந்த நிகழ்ச்சி நடக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கும் பத்திரிகையாளர்களுக்கு அழைப்பு இல்லை. நிகழ்ச்சி முழுமையாக பின்னர் சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.
பிக் பிக்சர்ஸ், ஸ்டுடியோ கிரீன் நிறுவனங்கள் தயாரித்துள்ள இந்தப் படத்தில் சூர்யா-அனுஷ்கா, விவேக் ஆகியோர் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். ஹரி இயக்கியுள்ளார். தூத்துக்குடி மற்றும் நெல்லைப் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது.
படத்தின் இசை உரிமையை சோனி நிறுவனம் பெற்றுள்ளது. மே இறுதிக்குள் அல்லது ஜூன் முதல் வாரம் சிங்கம் திரையரங்குக்கு வரும் என்று கூறப்படுகிறது. காரணம் சன் பிக்ஸர்ஸின் அடுத்த படம் தில்லாலங்கிடியை ஜூனில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.
More from Filmibeat
anushka அனுஷ்கா இசை வெளியீடு சன் பிக்சர்ஸ் சிங்கம் சூர்யா ஹரி music launch singam sun pictures surya


Click it and Unblock the Notifications











