சிவசக்தி பாண்டியனின் சூரியன் சட்டக்கல்லூரி!

தேசிய விருது பெற்ற கடல்பூக்கள், வெற்றிக் கொடிகட்டு போன்ற படங்களும் இவரது தயாரிப்புகளே. ஒரு சின்ன இடைவெளிக்குப் பிறகு மீண்டும் முழு வீச்சில் தயாரிப்பில் இறங்கியுள்ளார் பாண்டியன்.
இந்தப் படத்துக்கு சூரியன் சட்டக் கல்லூரி எனப் பெயர் சூட்டியுள்ளார். எஸ்எஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாராகும் இந்தப் படத்தின் கதையை சிவசக்தி பாண்டியனே எழுத, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் பவன்.
இந்தப் படத்தில் கஜினி-மித்ரா என இரு புதுமுகங்கள் அறிமுகமாகின்றனர். ராதாரவி, கஞ்சா கருப்பு, காதல் சுகுமார் என பிரபல முகங்களும் படத்தில் உண்டு.
எடுத்த எடுப்பிலேயே சினிமா எடுக்க வந்தவரல்ல சிவசக்தி பாண்டியன். பல ஆண்டுகள் திரையரங்கு உரிமையாளராக விநியோகஸ்தராக இருந்தவர்.
திரைப்படத் தயாரிப்பாளராக களமிறங்கியபோது வித்தியாசமான கதைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தந்தார். அதன் விளைவுதான் வரிசையான வெற்றிப் படங்களை அவரால் கொடுக்க முடிந்தது. தமிழ் சினிமா ஒன்றில் முதல் முறையாக வாகா (இந்திய - பாக்) எல்லையையும், ஜாலியன் வாலாபாக் படுகொலை நினைவிடத்தையும் காட்டியது இவரது படத்தில்தான் (கனவே கலையாதே).
சூரியன் சட்டக் கல்லூரி படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது. இது வழக்கமான காதல் படமாக இல்லாமல், அதிரடி ஆக்ஷனும் காதலும் பின்னிப் பிணைந்த வித்தியாசமான படைப்பாக இருக்கும் என்கிறார் பாண்டியன். சென்னை பின்னி மில்லில் செட் போட்டு வேகவேகமாக படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











