சுயசரிதை எழுதும் ஸ்லம்டாக் புகழ் ரூபினா அலி

By Staff

Slumdog Child Star Rubina
லண்டன்: ஆஸ்கார் விருது பெற்ற ஸ்லம்டாக் மில்லியனேர் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ரூபினா அலி, தனது வாழ்க்கையை சுய சரிதமாக எழுதி வெளியிடப் போகிறாராம்.

9 வயதே நிரம்பிய சிறுமியான ரூபினா, பிறந்தது, வளர்ந்ததெல்லாம் வறுமை நிறைந்த மும்பை சேரிப்பகுதியில்தான்.

இந்த 9 வயதுக்குள் அந்தச் சிறுமிக்கு நேர்ந்த அனுபவங்களையே தனிப் புத்தகமாக்கி பிரபல டிரான்ஸ்வேர்ல்டு பதிப்பகத்தார் வெளியிடப் போகிறார்கள்.

ஸ்லம்டாக் மில்லியேனர் படத்தில் கிடைத்த வருவாயில் ஒரு பகுதியைக் கொண்டு தனி அறக்கட்டளை அமைத்த படத்தின் தயாரிப்பாளர்கள், அதைக் கொண்டு அந்தப் படத்தில் நடித்த குழந்தைகளுக்கு நல்ல வீடு, படிப்பு வசதி தர முயன்றனர். ஆனால் அதைப் பணமாக தங்கள் கைகளில் தந்துவிட வேண்டும் என அந்தக் குழந்தைகளின் பெற்றோர் பேராசையில் வற்புறுத்த, தாங்கள் செய்ய நினைத்ததை செய்யாமலேயே விட்டுவிட்டனர் படத் தயாரிப்பாளர்கள்.

இப்போது இந்தப் புத்தகம் மூலம் வரும் பணத்தில் அந்தச் சிறுமிக்கு தேவையான உதவிகளைச் செய்வதாகக் கூறியுள்ளனர் பதிப்பகத்தினர்.

'ஒரு சேரிச் சிறுமியின் கனவு: நட்சத்திரங்களுக்குள் என் பயணம் (Slumgirl Dreaming: My Journey to the Stars) என்ற தலைப்பில் வரும் ஜூலையில் பிரிட்டனில் வெளியாகிறது இந்தப் புத்தகம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X