அமிதாப், ஷாரூக் கானுக்கு தபால்தலை!- இலங்கை ஏற்பாடு

அபிதாப் பச்சன், ஷாருக்கான் மற்றும் ஐஸ்வர்யா ராய்க்கு தபால் தலைகள் வெளியிடப்பட உள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.
இந்திய நடிகர் நடிகைகளுக்காக இலங்கையில் தபால் தலை வெளியிடப்படுவது இதுவே முதல் முறை.
ஜூன் மாதம் இலங்கை தலைநகர் கொழும்பில் நடக்கும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் இந்த தபால் தலைகள் வெளியிடப்படும்.
இந்த விழாவில் அமிதாப் கலந்து கொள்வது சந்தேகத்துக்கிடமாக உள்ள நிலையில், இந்த தபால் தலை வெளியீடு பற்றி தகவல் வெளியிட்டுள்ளது இலங்கை அரசு.
வன்னி அழிப்பின் ஓராண்டினை மிகப்பெரும் விழாக்களாக மே 18 அன்று நாடெங்கும் வெற்றிக் கொண்டாட்டங்கள் நடைபெற வேண்டும் என்று கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார். அதன் விளைவாக பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதில் அமிதாப் பச்சன் கலந்து கொள்ளும் விழா, தமிழக சின்னத்திரை கலந்துகொள்ளும் இசை நிகழ்ச்சி ஆகியவையும் அடக்கம்.
இலங்கையில் நடக்கும் இந்த விழாவில் கலந்து கொள்ளக்கூடாது என்று திருமாவளவன், வைகோ, சீமான், நெடுமாறன் மற்றும் தமிழின உணர்வாளர்கள் கோரிக்கை வைத்ததையடுத்து அமிதாப் மற்றும் தமிழக சின்னத்திரை கலைஞர்கள் தங்கள் பயணத்தை ரத்து செய்துள்ளனர்.
இந்நிலையில் அமிதாப் மற்றும் ஷாருக்கானுக்கு இலங்கையில் தபால் தலைகள் வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











