twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தமிழ் சினிமாவின் 'ஆன்ட்டி' கிளைமேக்ஸ்!

    By Chakra
    |

    தமிழ் சினிமாக்காரர்கள் புதுசு புதுசாக, தினுசு தினுசாக எதையாவது கண்டுபிடித்து அறிமுகப்படுத்துவதில் கில்லாடிகள். அந்த வரிசையில் இப்போது லேட்டஸ்டாக தமிழ் சினிமாவில் பிரபலமாகி வருவது ஆன்ட்டிகளை குத்துப் பாட்டுகளுக்கு ஆட வைப்பது.

    அந்தக் காலத்தில் ஜெயமாலினி, சில்க் ஸ்மிதா, அனுராதா, டிஸ்கோ சாந்தி என்று ஒரு வாளிப்பான வரிசை இருந்தது. பிறகு அது கரைந்து ஹீரோயின்களே கவர்ச்சி காட்ட ஆரம்பித்தனர். இதனால் கவர்ச்சிக் கன்னிகளை தனியாக ஆட வைப்பது குறைந்து, மறைந்தே போனது.

    சில ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக அறிமுகமானது குத்துப் பாட்டு. இந்தப் பாட்டுகளுக்கு ஆடுவதற்காகவே மும்பையிலிருந்து பலரையும் இறக்குமதி செய்தது கோலிவுட். முமைத்கான் உள்ளிட்ட சிலர் வந்து தமிழ் சினிமாக்களை களேபரப்படுத்தினர்.

    ஆனால் இதிலும் ஹீரோயின்கள் புகுந்து விட்டதால் குத்துப் பாட்டு எக்ஸ்பர்ட் நாயகிகளுக்கு டிமான்ட் குறைந்து போனது. இந்த நிலையில் தற்போது இன்னும் ஒரு புது டிரென்ட்டை இறக்கி விட்டுள்ளது தமிழ் சினிமா.

    அது யாருக்கும் அறிமுகமாகாத, 30 முதல் 40 வயதுகளில் உள்ள கவர்ச்சி பெண்களை ஆட வைப்பது. நாடோடிகள் படத்தில் இப்படி ஒரு அட்டகாசமான பாடல் இடம் பெற்றிருந்தது. அதில் அப்படத்தின் ஹீரோ சசிக்குமார் உள்ளிட்டோர் சேர்ந்து ஒரு ஆன்ட்டியுடன் போட்ட ஆட்டப் பாடல் செம ஹிட்டானது.

    அந்தப் பாட்டுக்கு ஆட்டம் போட்ட ஆன்ட்டி யார் என்பதே நிறையப் பேருக்குத் தெரியாது. ஆனாலும் பாடல் பட்டையைக் கிளப்பியது. இதையடுத்து இப்போது இந்த புதிய டிரென்ட் கோலிவுட்டில் படு வேகமாக பாப்புலராகி வருகிறது. படத்துக்குப் படம் ஏதாவது ஒரு ஆன்ட்டியை ஆட வைத்து ரசிகர்களை அதிர வைக்கின்றனர் தமிழ் சினிமாக்காரர்கள்.

    இப்படி நடு வயதுப் பெண்மணிகளை வைத்து ஆட வைப்பதால் பல சவுகரியங்கள் இருக்கிறதாம். கவர்ச்சியுடன் கூடிய கிக் ஆட்டம் கிடைப்பது ஒன்று என்றால், இப்படி நடனம் ஆடுவோருக்கு பெரிய அளவில் சம்பளம் தர வேண்டியதில்லை என்பதும் ஒரு சவுகரியமாம். மேலும் வித்தியாசாமான முகங்களைப் பார்க்கும் வாய்ப்பு என்பதால் ரசிகர்களுக்கும் ரசிக்க வசதி என்கிறார்கள்.

    அடுத்து என்ன டிரென்டை இறக்கி ரசிகர்களை மயக்கப் போகிறார்களோ தெரியவில்லை...!

    English summary
    Tamil cinema has come with another trend in item songs. Middle ages women dancers replace Mumaith Khan and co. Nadodigal movie had a song like this. This latest trend of dance attracts the fans too.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X