சென்சார் சிக்கலில் தம்பிவுடையான்!

இந்தப் படத்தை எம் தியேட்டர் என்ற பட நிறுவனம் தயாரிக்கிறது. புதுமுகங்கள் ஆதித்யா-மனிஷா ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்தை ராஜா மகேஷ் என்பவர் இயக்கியுள்ளார்.
தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளின் நிஜ வாழ்க்கை அவலங்களைச் சொல்லும் படமாம் இது. காவிரித் தண்ணீர் வராததால் விவசாயிகள் வறுமையின் எல்லைக் கோட்டுக்கே செல்கிறார்கள். பஞ்சம் பிழைக்க வேறு ஊருக்குப் போகிறார்கள். இந்த சூழலில், ஊர் மக்களைத் திரட்டி நாயகன் போராடுகிறான்.
உள்ளூர் அமைச்சர் தலையிட்டு அந்தப் போராட்டத்தை முறியடிக்கப் பார்க்கிறார். இதில் தன் நண்பனையும் இழக்கிறான். ஆத்திரம் அடைந்த கதாநாயகன், அமைச்சரின் மனைவி, மகளைக் கடத்திச் சென்று "காவிரியில் தண்ணீர் திறந்து விடவில்லை என்றால் இருவரையும் கொன்று விடுவேன்" என்று மிரட்டுகிறான். பயந்துபோன அமைச்சர் மேலிடத்தில் முறையிட்டு காவிரியில் தண்ணீர் திறந்துவிட ஏற்பாடு செய்வது போல காட்சி அமைக்கப்பட்டுள்ளதாம்.
இந்தப் படத்தைப் பார்த்த சென்சார் போர்ட் அதிகாரிகள் அமைச்சரின் மனைவி-மகள் கடத்தப்படுவது போன்ற காட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
அந்த காட்சியை படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறினர். டைரக்டர் அதை ஏற்க மறுத்ததால், சான்றிதழ் தர மறுத்துவிட்டனர்.
இதையடுத்து இந்தப் படம் ரிவைஸிங் கமிட்டிக்குப் போகிறதாம்!.


Click it and Unblock the Notifications