நெறைய சாதிக்க வேண்டியிருக்கு- கத்ரீனா கைப்

பெப்சிகோ நிறுவனத் தயாரிப்பான 'ஸ்லைஸ்' குளிர்பான அறிமுக விழா டெல்லியில் நடந்தது. பெப்சி மாடலாக உள்ள பிரபல நடிகை கத்ரீனா கைப் விழாவில் பேசுகையில், கடந்த 2 வருடங்களாக பாலிவுட் முன்னணி நட்சத்திரமாக உள்ளேன். 'மெய்னே ப்யார் க்யூன் கியா', 'ஹம்கோ கோ தீவானா கர் கயே', 'நமஸ்தே லண்டன்', 'பார்ட்னர்', 'ரேஸ்' ஆகிய எனது படங்கள் அடுத்தடுத்து சூப்பர் ஹிட்டாகி இருப்பதால் எனக்கு நல்ல மார்க்கெட் இருக்கிறது.
என்னை ரசிகர்கள் அதிகம் விரும்புவதற்குக் காரணம் எனது குழந்தைத்தனமான முகம்.
ஆனாலும் நடிப்பில் நான் சாதித்துவிட்டதாக நினைக்கவில்லை. ஆஹா! இப்படியொரு கேரக்டருக்காகத்தான் காத்திருந்தேன் என்று நான் இதுவரை நடித்த எந்த படத்தின் மூலமும் திருப்தியடையவில்லை.
நமஸ்தே லண்டனில் எனது நடிப்பு பிரமாதமாகப் பேசப்பட்டது. ஆனால் அது எனது ஒரு பரிணாமம் மட்டுமே. என்னில் உள்ள மற்ற பரிமாணங்களையும் முழுவதுமாக வெளிப்படுத்த வாய்ப்பு வரவில்லை.
நான் நடிக்கும் படங்கள் தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை ஈட்டித்தருவதில் பெருமைதான். ஆனால் இயல்பான வாழ்க்கையை பிரதிபலிக்கும் பாத்திரத்தில் நடிக்கவேண்டும் என்பது எனது நீண்டநாள் கனவு. என் திறமையை முழக்க அதில் வெளிப்படுத்துவேன்.
'குரு' , 'ஜப் வீ மெட்' ஆகிய படங்களில் நடித்த கதாநாயகிகளின் நடிப்பு என்னை அசரவைத்தது. இரண்டு படங்களிலும் பெண்களின் மன உறுதியை பிரதிபலிக்கும் பிரமாதமான கேரக்டர்கள். நடிப்பில் அசத்தியுள்ளனர். கிட்டத்தட்ட நான் நினைக்கும் கேரக்டரைபோல இருந்தது என்றார் கத்ரீனா.
கத்ரீனாவுக்கு ஒரு நடிகையை ரொம்பப் பிடிக்கும். அவர் கஜோல். கஜோலை யாருக்குமே பிடிக்காமல் இருக்காது. அப்படி ஒரு கேரக்டர் அவர். பார்த்தவுடனேயே யாருக்கும் பிடித்துப் போய் விடும் மாதிரியான லவ்வபிள் கேரக்டர் கஜோல். மிகச் சிறந்த நடிகையும் கூட. எனக்கு கஜோலை ரொம்பப் பிடிக்கும் என்கிறார் கத்ரீனா


Click it and Unblock the Notifications











