twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    குழந்தை கழுத்தை நெறித்தேனா? - வனிதா பதில்

    By Chakra
    |

    Vanitha
    சென்னை: என் குழந்தையை பார்க்க விடாமல் செய்கிறார் ஆகாஷ். குழந்தை கழுத்தை நான் நெறித்ததாக பொய்யாக புகார் கொடுத்துள்ளார், என்று கூறினார் நடிகை வனிதா.

    நடிகை வனிதாவுக்கும் முதல் கணவர் ஆகாஷுக்கும் பிறந்த மகன் விஜய் ஸ்ரீஹரியை தங்கள் வசம் ஒப்படைக்க இருவரும் வற்புறுத்தி வருகின்றனர். குழந்தை வனிதா வசம் இருக்க உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டு உள்ளது.

    இந்நிலையில் குடும்ப நல நீதிமன்றத்தில் குழந்தை தன்வசம் இருக்க உத்தரவிடக் கோரி ஆகாஷ் மனுதாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி மீனாட்சி சுந்தரம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. மேலும் வனிதாவிடம் குழந்தையை ஒப்படைக்க உயர்நீதி மன்றம் விதித்துள்ள 2 வார காலக்கெடுவை 4 வாரங்களாக நீட்டிக்குமாரு மனு செய்துள்ளார்.

    இந்த உத்தரவுக்கு தடைகோரி உச்சநீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்துள்ளார்.

    இந்த நிலையில், வனிதாவும் ஆகாஷும் இன்று குடும்ப நல நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். ஆகாஷ் மேலும் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில் உயர்நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் வனிதாவும் ஆனந்தராஜூம் விமான நிலையத்தில் நடந்து கொண்டு உள்ளனர். விஜய் ஸ்ரீஹரிக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு மனு அளித்துள்ளேன். இருவர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உள்ளேன். விஜய் ஸ்ரீஹரி 2 வாரம் என்னுடன் இருக்க உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது (இந்தக் கெடு நாளை முடிகிறது) என்று மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

    இந்த மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்யும்படி வனிதாவுக்கு நீதிபதி உத்தர விட்டார். விசாரணையை 20-ந்தேதிக்கு தள்ளி வைத்தார்.

    பின்னர் வனிதா நிருபர்களிடம் கூறுகையில், "என் குழந்தை விஜய் ஸ்ரீஹரியை பார்க்கவிடாமல் என்னைத் தடுக்கின்றனர். குழந்தை கழுத்தை நான் நெரித்ததாக அபாண்டமாய் பழி சுமத்துகின்றனர். எந்த தாயாவது குழந்தையிடம் அப்படி நடப்பாளா? உண்மையில் நீதிமன்ற உத்தரவை அவமதிப்பது ஆகாஷ்தான். அவர் மீதுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றார்.

    English summary
    Actress Vanitha's ex husband Aakash today filed two separate petitions in the high court. In which he seeks 2 weeks extention to hand over the child to Vanitha. The court postponed the inquiry to January 20th.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X