தயாரிப்பாளர்கள் நிலை: வி.சி.குகநாதன் கவலை
இப்போதெல்லாம் நடிகர் நடிகைகளைப் பார்த்து தயாரிப்பாளர்கள் எழுந்து நிற்கும்படியாகிவிட்டது. இந்த நிலை மாற வேண்டும். தமிழ் திரைப்பட நடிகர்கள் தயாரிப்பாளர்களை மதிக்க வேண்டும் என்றார் பெப்ஸி தலைவர் வி.சி.குகநாதன்.
புதுமுகங்கள் சந்தீப்-தாமரை நடித்த சித்திரப் பூவே படத்தின் பாடல் வெளியீட்டு விழா, சென்னை 'பிலிம்சேம்பர்' தியேட்டரில் நேற்று நடந்தது. தென்னிந்திய திரைப்ப்பட தொழிலாளர்கள் சம்மேளன (பெப்ஸி) தலைவர் வி.சி.குகநாதன் பாடல்களை வெளியிட்டார். விழாவில் அவர் பேசியதாவது:
"நடிகர்-நடிகைகள், தயாரிப்பாளர்களை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். எங்கள் காலத்தில் தயாரிப்பாளர்கள் வந்தால், நடிகர்-நடிகைகள் முதல் படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் எழுந்து நிற்போம்.
அது, இப்போது அப்படியே உல்ட்டாவிகிவிட்டது. நடிகர்-நடிகைகளை பார்த்து தயாரிப்பாளர்கள் எழுந்து நிற்கிறார்கள். இந்த பரிதாப நிலை மாற வேண்டும்.
இந்த படத்தின் தயாரிப்பாளர் புதியவர்தான். அவர் இந்த அரங்கத்துக்குள் வந்தபோதே, படத்தில் நடித்துள்ள நடிகர்-நடிகைகள் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினார்கள். அதைப் பார்ப்பதற்கு சந்தோஷமாக இருந்தது. பழைய காலம் திரும்பி விட்டது போன்று உணர்ந்தேன். மற்ற நடிகர்-நடிகைகளும் இதை பின்பற்ற வேண்டும்," என்றார்.
வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் 'கலைப்புலி' ஜி.சேகரன், 'கில்டு' தலைவர் ஜே.வி.ருக்மாங்கதன் ஆகியோரும் விழாவில் பேசினார்கள்.
படத்தின் தயாரிப்பாளர் எம்.பெரியசாமி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். இயக்குநர் ரா.கலைமுருகன் நன்றி கூறினார். பிஆர்ஓ சங்கத் தலைவர் விஜயமுரளி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.


Click it and Unblock the Notifications











