'பூஞ்சோலை'க்கு விடிவுகாலம்!

By Staff

Venkat Prabhu
கிட்டத்தட்ட 13 வருடங்களுக்கு முன்பு வெங்கட் பிரபு கதாநாயகனாக நடிக்க உருவான படத்திற்கு இத்தனை காலம் கழித்து விமோச்சனம் பிறந்துள்ளது. வெங்கட் பிரபு லைம் லைட்டுக்கு வந்திருப்பதால் இந்தப் படத்தை ரிலீஸ் செய்ய முயற்சிகள் தொடங்கியுள்ளதாம்.

கங்கை அமரன் இயக்க, இளையராஜா இசையமைக்க வெங்கட் பிரபு ஹீரோவாக நடித்த படம்தான் பூஞ்சோலை. அவருக்கு ஜோடியாக நடித்தவர் சங்கீதா. அப்போது இவரது பெயர் ராசி.

படம் முடிந்து, பாடல்களும் ரிலீஸாகி, ஹிட்டும் ஆனது. ஆனால் படம்தான் கடைசி வரை வரவே இல்லை. அப்படியே முடங்கிப் போனது. இப்படியே 13 வருடங்கள் ஓடி விட்டது.

நடிகராக வாழ்க்கையை ஆரம்பித்த வெங்கட் பிரபு அதில் வெற்றி பெற முடியாமல் போனது. ஆனால் ஒரு கதவை மூடிய பகவான், இன்னொரு கதவை சூப்பராக திறந்து வைத்தான் - இயக்குநராக வெற்றி பெற்றார் வெங்கட் பிரபு.

வித்தியாசமான கதையமைப்புடன் படம் கொடுக்கக் கூடியவர் என்ற புதிய பெருமை வெங்கட் பிரபுவுக்குக் கிடைத்துள்ளது.

இந்த நிலையில் பூஞ்சோலை படத்தை திரைக்குக் கொண்டு வர ஏற்பாடுகள் நடந்து வருகிறதாம்.

பூஞ்சோலை வெளியாகி, வெங்கட் பிரபுவின் வறண்டு போன நடிப்புச் சோலைக்கு மணம் சேர்க்குமா?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X