விஜய் டிவியின் மாயாலோகம்!

பெயரைப் போலவே மாயாஜாலம், மந்திரம், தந்திரம் என எல்லா அம்சங்களும் நிறைந்திருக்கும் இந்த மாய உலகத்தில்.
மாயாலோகம் என்னும் இடத்ைத ராஜா நாக்கிமுக்கி ஆண்டு வருகிறார். அவரின் ராணி மின்னல் இடையாள் தனது அழகைப் பற்றியே எப்போதும் எண்ணி சந்தோஷப்பட்டுக் கொண்டிருப்பார். எந்த வகையிலாவது தன்னை குதூகலப்படுத்தி, சிரிக்க வைக்க வேண்டும் என்பது ராணியின் தீராத ஆசை, கனவு எல்லாம்.
இவர்களைச் சுற்றி எப்போதும் குள்ள சகாக்கள் அமைச்சர்களாக உலா வருவர்.
புதுமையை எதிர்பார்க்கும் ராணியின் உற்சாகப் பசியைத் தீர்க்க அப்சரா மாயக்கண்ணி ராணிக்காக, பூலோகத்திலிருந்து தலை சிறந்த மாயாஜால கலைஞர்களை கடத்திக் கொண்டு அவர்களை மாயலோகத்தில் பலவித மாயாஜாலங்களை செய்ய வைக்கிறார்.
ராஜா நாக்கிமுக்கியாக பாலாஜி, மின்னல் இடையாளாக ஆஷா, அப்சரா மாயக்கண்ணியாக கவிதா ஆகியோர் நடிக்கவுள்ளனர்.
ராணிக்காக புரியப்படும் இந்த மாயாஜாலங்களும் தர்பாரில் நடைபெறும் நகைச்சுவைக் காட்சிகளின் கலவைதான் ரான் இந்தியா மாயாலோகம் நிகழ்ச்சி.
விஜய் டிவியில் செப்டம்பர் 7ம் தேதி முதல் ஞாயிறுதோறும் காலை 10 மணிக்கு ரான் இந்தியா மாயாலோகம் ஒளிபரப்பாகும்.
அசர வைக்கும் வித்தைகளில் அசாத்திய மாயாஜாலங்களை செய்ய இந்தியாவின் பல்வேறு இடங்களிலிருந்து தலை சிறந்த மேஜிக் கலைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பர்.


Click it and Unblock the Notifications











