twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'அண்ணன்கள்' ராமதாஸ்-வைகோ: கலக்கும் விந்தியா

    By Staff
    |

    Vindhiya
    நாமக்கல்: அண்ணன் ராமதாஸும், புரட்சி அண்ணன் வைகோவும், கம்யூனிஸ்டுகளும் நம்மிடம் இருக்கும்போது அதிமுகதான் வெற்றிக் கூட்டணி என்று கூறியுள்ளார் நடிகை விந்தியா.

    அதிமுக சார்பில் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பட்டி தொட்டியெங்கும் விந்தியா படு தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார்.

    தனது பிரசாரத்தில் விஜயகாந்த், சரத்குமார், நேற்று தலைவரான கார்த்திக் என சகலரையும் சரமாரியாக விமர்சித்துத் தள்ளுகிறார்.

    நாமக்கல் தொகுதியில் அதிமுக வேட்பாளர் வைரம் தமிழரசியை நேற்று ஆதரித்துப் பிரசாரம் செய்தார் விந்தியா.

    கொண்டிசெட்டிப்பட்டியில் திறந்த ஜீப்பில் நின்றபடி அவர் பிரசாரம் செய்ததைக் காண ஏகப்பட்ட ரசிகர்கள், அதிமுகவினர் திரண்டு வந்து பார்த்தனர்.

    மோகனூர் என்ற இடத்தில் விந்தியா பேசினார். அப்போது பணத்தை பார்த்து மயங்காதீர்கள். அதிகாரத்தை கண்டு பயப்படாதீர்கள். உங்கள் ஓட்டை முதல் வேளையாக வருகிற 13ம் தேதி காலையிலேயே உங்கள் ஓட்டை நீங்கள் போட்டு விடுங்கள்.

    எப்போது அண்ணன் ராமதாஸ் அதிமுக கூட்டணியில் சேர்ந்தாரோ அப்போதே அதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி உறுதி ஆகிவிட்டது.

    புரட்சி அண்ணன் வைகோவும், கம்யூனிஸ்டு கட்சிகளும் நம்முடன் இருக்கும் போது நமது கூட்டணி வெற்றி கூட்டணி தான்.

    புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். முதன்முதலில் ஒரு கட்சியில் உறுப்பினராக இருந்து கழக பொருளாளராக உயர்ந்து கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். மீண்டும் தனியாக அ.தி.மு.கவை ஆரம்பித்து தேர்தலை சந்தித்து முதல்வரானார்.

    அதேபோல் புரட்சி தலைவியும் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்த பின்னர் முதல்வரானார். ஆனால் இன்றோ 10, 15 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து விட்டு உடனே முதல்வர் ஆக வேண்டும் என ஆசைப்படுகின்றனர்.

    முதல்வர் பதவி என்பதை கோவிலில் பிரசாதம் கேட்பதை போல் கேட்கின்றனர். திமுக ஆட்சியில் சட்டம், ஒழுங்கு கெட்டு விட்டது. திமுக குடும்ப கட்சி என்றும், காங்கிரஸ் தமிழர்களுக்கு துரோகம் இழைக்கிறது என்று பேசிக் கொண்டே போனார் விந்தியா.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X