எழுத்தாளரை மிரட்டினேனா?: விவேக்

கே.கே.நகரில் உள்ள தனது வீட்டில் வாடகைக்கு வசித்து வரும் எழுத்தாளர் சுப்ரஜா என்பவரை, வீட்டை விட்டு காலி செய்யுமாறு அடியாட்களுடன் வந்து விவேக் மிரட்டியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தனக்கு விவேக் கொலை மிரட்டல் விடுத்ததாகவும், தன் வீட்டில் புகுந்து பொருட்களைச் சேதப்படுத்தியதாகவும், கே.கே. நகர் காவல்துறையில் சுப்ரஜா புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து விவேக்கிடம் கேட்டபோது,
எனது வீட்டில் வசித்து வரும் எழுத்தாளர் சுப்ரஜாவை காலி செய்யும்படி கூறியது உண்மை தான். ஆனால் இதை நான் அவரிடம் சொல்லியே மூணு வருஷம் ஆயிடுச்சிங்க.
ஆனாலும், அவரை பயமுறுத்தவோ அடியாட்களைக் கொண்டு மிரட்டவோ நான் முயற்சி செய்தது கூட கிடையாது. அது அந்த எழுத்தாளரின் அபத்தமான கற்பனை.
உண்மையைச் சொல்றேங்க, நான் அந்த வீட்டுப் பக்கம் போய் 3 வருஷங்கள் ஆச்சு. எனக்கு சிரிக்க வைக்கத்தான் தெரியும், பயமுறுத்த தெரியாது.
அவர்தான் தன்னை பெரிய எழுத்தாளர் என்றும் ஏதாவது பிரச்சினை செய்தால் அரசியல் செல்வாக்கு மற்றும் பத்திரிகை செல்வாக்கை வைத்து என்னை ஒழித்து விடுவதாகவும் மிரட்டி வருகிறார்.
வீட்டைக் காலி செய்துவிடும்படி நான் எப்போதோ கூறி விட்டேன். ஆனால் சுப்ரஜா அதற்கு மறுத்து வருகிறார். என் மீது பொய்யான குற்றச்சாட்டை பரப்பி வருகிறார்.
அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க ஆலோசித்து வருகிறேன். இதுகுறித்து காவல் துறை ஆணையருக்கும் புகார் தரப் போகிறேன் என்றார்.


Click it and Unblock the Notifications











