ஒரு கவிஞரின் வாழ்க்கையை மாற்றிய கந்தசாமி

அதன் விளைவு கந்தசாமி வெளியீட்டுக்குப் பின்னர் மட்டும் 35 புதிய படங்களில் பாடல் எழுதும் வாய்ப்பு கிடைத்துள்ளதாம் விவேகாவுக்கு. இதற்கு முன்பே 25 படங்களில் எழுதிக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த எழுபது படங்களில் 15 படங்களுக்கு முழு பாடல் எழுதும் பொறுப்பு விவேகாவுக்குக் கிடைத்துள்ளதாம்.
'இன்றைய தேதிக்கு நிற்கக் கூட நேரமில்லை' என்கிறார் சந்தோஷம் கலந்து பரபரப்புடன் இந்த இளம் கவிஞர்.
தனது திரையுலகப் பயண அனுபவத்தை செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார் விவேகா. அவர் கூறியது:
சினிமா பாடல் எழுத வேண்டும் என்பதுதான் என் கனவு, லட்சியம் எல்லாமே. சொந்த ஊரான வேடங்குளத்திலிருந்து சென்னை வந்து அந்த லட்சியத்தை அடை நான் சந்தித்த போராட்டங்கள் ஏராளம்.
உனக்கும் எனக்கும், திருவிளையாடல் ஆரம்பம், சந்தோஷ் சுப்ரமணியபுரம்... என வெற்றிப்படங்களில் நானும் ஒரு அங்கமாகிவிட வாய்ப்புகள் பெருகின. ஆனால் கந்தசாமியில்தான் எல்லாப் பாடல்களையும் நானே எழுதும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. எட்டுப் பாடல்கள். எட்டும் ஹிட்.
இன்று பெரிய தொழிலதிபர்கள் தொடங்கி, சின்ன குழந்தைகள் வரை என் பாடல்களை என்னிடமே பாடிக் காட்டுவது பெருமிதமாக உள்ளது.
எனக்கு எழுதுவதுதான் பிடித்தமான வேலை. சிலர் என்னை பா விஜய் மாதிரி நடிக்க விருப்பமா என்று கேட்டார்கள். எனக்கு அதில் விருப்பமில்லை. நிச்சயம் நான் நடிக்கவோ படம் இயக்கவோ போக மாட்டேன். எனக்குத் தொழில் கவிதை, பாடல்கள் எழுதுவதே. அதில் கண்ணதாசன், வைரமுத்து போல ஒரு நிலையான இடத்தைப் பெற்றால் போதும்.
பாடல்களில் யாரையும் காப்பியடிக்கவோ பிரசிபலிக்கவோ விருப்பமில்லை. என்வழி தனி வழியாக இருப்பதையே சிறப்பாகக் கருதுகிறேன்.
சிலர் திரைப்பாடல்களில் கவிதை செய்ய முடியாதா எனக் கேட்கிறார்கள். சினிமா என்பது வர்த்தக உலகம். அந்த உலகத்துக்குத் தேவையானதைத்தான் தரமுடியும். கதைக்கு ஏற்ற சூழல் இருந்தால் இலக்கியமும் திரைப்பாடல்களில் பிறக்கும், என்றார் விவேகா.


Click it and Unblock the Notifications